Advertisement

அக்கம் பக்கம்

குழப்பமோ குழப்பம்!

'இவரை புரிந்து கொள்ளவே முடியவில்லையே' என, தெலுங்கானா மாநில, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், அம்மாநில முதல்வர், சந்திரசேகர ராவின் மகனுமான, கே.டி.ராமாராவின் நடவடிக்கைகளைப் பார்த்து, குழம்பி போயிருக்கின்றனர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர்.

சந்திரசேகர ராவிற்கு பின், கட்சியின் கட்டுப்பாடு முழுவதும், ராமாராவிடம் தான், வரப்போகிறது. இதனால், அவரை காக்கா பிடிக்கும் வேலையில், கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.

சமீபத்தில், அவரை சந்தித்த கட்சி நிர்வாகிகள், 'உங்கள் பிறந்த நாளை, விமரிசையாக கொண்டாடப் போகிறோம்' என்றனர். ராமாராவோ, 'என் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிப்பது, பத்திரிகை, 'டிவி' சேனல்களில் விளம்பரம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என, உத்தரவிட்டார்.

இதனால், பிறந்த நாளின் போது, நிர்வாகிகள் அமைதியாக இருந்து விட்டனர். ஆனால், அதே நாளில், கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை மற்றும், 'டிவி' சேனல்களில், ராமாராவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஏராளமான விளம்பரங்கள் கட்சி மேலிடம் சார்பில் கொடுக்கப்பட்டிருந்தன.

அதிர்ந்துபோன கட்சி நிர்வாகிகள், ராமாராவுக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்தனர். அவர்களோ, 'விளம்பரம் வேண்டாம் என, ஒரு பேச்சுக்கு கூறினால், அமைதியாக இருந்து விடுவீர்களா; இனிமேல் தான், உங்களுக்கு கச்சேரி காத்திருக்கிறது' எனக்கூற, கட்சி நிர்வாகிகள், பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement