Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
ஹிரோஷிமாவில் அமைதி நினைவகம்
ஜப்பானிய மொழியில், அணுகுண்டு குவிமாடம் எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் என்னும் பெயர் கொண்ட அமைதி நினைவகம், ஹிரோஷிமா நகரில் உள்ளது. 2ம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகர் மீது 1945 ஆக., 6ல் முதலாவது அணுகுண்டைப் போட்டது. இதனால் இக்கட்டடம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. கட்டடத்தின் புறச்சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் குவிமாடம் பாதிக்கப்படவில்லை. நகரத்தை மீண்டும் உருவாக்கியபோது, இதை மீண்டும் கட்டாமல் அணுகுண்டின் அவலங்களை நினைவுகூரும் வகையில் இதை நினைவகமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
அணுகுண்டால் வளர்ந்த கலை
1945 ஆக., 6 மற்றும் 9ம் தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு விழுந்த போது, பிழைத்தவர்களின் மனதை மாற்ற, ஓரிகாமி கலை தான் உதவியது. ஓரிகாமி என்பது காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஒரு ஜப்பானியக் கலை. 'ஓரி' என்பது காகிதத்தையும் 'காமி' என்பது காகிதம் மடித்தலையும் குறிக்கும். தப்பிப் பிழைத்தவர்கள், ஓரிகாமியில் சமாதான புறா செய்து வழிபட்டனர். அன்று முதல் ஓரிகாமி, ஜப்பானில் மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்தியாகவும் பயன்படுகிறது.. இந்தியாவில் ஓரிகாமி அமைதிப்புறா செய்யும் கலையில், தேவதாஸ் காந்தி என்பவர் நிபுணராக உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement