Advertisement

டீ கடை பெஞ்ச்

பெங்களூரு ஜெயிலுக்கு பறக்கும் ஆம்பூர் பிரியாணி!



''ஆசிரியர்கள் இடமாறுதல்ல, லட்சக்கணக்குல பணம் விளையாடியிருக்கு பா...'' என, மசால் வடையை கடித்தபடியே, பேச்சை ஆரம்பித்தார் அன்வர் பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''சமீபத்துல, 150 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தினாங்க பா...
''இந்த பள்ளிகளுக்கு, தகுதியான ஆசிரியர்களை, கவுன்சிலிங் மூலமா மாறுதல்
செய்யணும்... ஆனா, கவுன்சிலிங் நடத்தாமலேயே, மூணுல இருந்து, எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் வாங்கிட்டு, மாறுதல் போட்டிருக்காங்க பா...
''நேர்மையான பள்ளிக்கல்வி துறை செயலருக்கு தெரியாம, ஒரே நாள்ல, இந்த மாறுதல் உத்தரவுகளை போட்டிருக்காங்க... 'இந்த உத்தரவுகளை ரத்து பண்ணிட்டு, கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் வழங்கணும்'ன்னு ஆசிரியர் சங்கத்தினர் சொல்றாங்க பா...'' என,
முடித்தார் அன்வர் பாய்.''சசிகலா படம் இல்லாததை, ஒருத்தர் கூட கண்டுக்கலை ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.
''எங்கே நடந்த சங்கதிங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சமீபத்துல,
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துல, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துதோல்லியோ...
''இதுல, தினகரன் அணியில இருக்கற நிர்வாகிகளும் கலந்துண்டா... முதல்வர் உட்கார்ந்திருந்த மேடையின் பின்புறம் இருந்த பேனர்ல, சசிகலா படம் இல்லை ஓய்...
''கூட்டத்துல இருந்த தினகரன் அணி நிர்வாகிகள், இது பத்தி கேட்டு, பிரச்னை கிளப்புவான்னு பழனிசாமி தரப்புல எதிர்பார்த்தா... ஆனா, அவா யாரும் அது பத்தி மூச்சே காட்டலை... கூட்டம் முடிஞ்சு, சத்தமே காட்டாம எழுந்து போயிட்டா...
''இதுவே பெரிய வெற்றின்னு, பழனிசாமி அணியினர் சொல்லிக்கறா ஓய்...'' என,
முடித்தார் குப்பண்ணா.
''சசிகலா சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சசிகலாவை பார்க்க, பெங்களூரு ஜெயிலுக்கு தினகரன் அடிக்கடி போறாருல்லா... ஒருமுறை கார்ல, ஆம்பூர் வழியா போவும் போது, பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சுடச்சுட, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கொடுத்து வழியனுப்பி வைச்சாரு...
''பிரியாணியை சாப்பிட்ட தினகரன், அந்த டேஸ்ட்ல மயங்கிட்டாரு... இதை, ஜெயில்ல இருக்கிற தன் சித்திக்கும் கொடுக்கணும்ன்னு,
எம்.எல்.ஏ.,விடம் சொல்லியிருக்காரு வே...''அதனால இப்ப, வாரத்துக்கு மூணு நாள், ஆம்பூர் பிரியாணி, பெங்களூரு ஜெயிலுக்கு போவுது... காலையில, ௯:௦௦ மணிக்கு தயாராகுற பிரியாணி, மதியம், 12:00 மணிக்கு ஜெயில்ல இருக்குற சசிகலாவுக்கு போயிடுது வே...
''சசிகலாவுக்கு மட்டும் கொடுத்தா போதுமா... அங்க இருக்கிற அதிகாரிகள் சிலருக்கும் சேர்த்து, 22 பார்சல் போட்டு அனுப்புதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.''அது சரி... வெளியில இருந்து வர்ற பிரியாணியை, கைதிகளுக்கு கொடுக்க, சட்டத்துல இடம் இருக்காங்க...'' என, அப்பாவியாக கேட்ட அந்தோணி
சாமியை பார்த்து, நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement