Advertisement

அக்கம் பக்கம்

வியூகம் பலிக்குமா?


'அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் அமையப் போகிறது. அந்த ஆட்சியில் முக்கிய பதவியை பெற விரும்புவோர் எல்லாம், என் பின்னால் அணி திரளலாம்' என, 'சவுண்டு' விட்டு வருகிறார், தேர்தல் வியூக நிபுணரான, பிரஷாந்த் கிஷோர்.கடந்த லோக்சபா தேர்தலில், மோடிக்கும், அதைத் தொடர்ந்து நடந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றவர் தான், இந்த பிரஷாந்த் கிஷோர்.இதையடுத்து, பிரஷாந்த் கிஷோருக்கு, அரசியல்வாதிகளிடையே கடும் கிராக்கி ஏற்பட்டது; ஆனால், அந்த கிராக்கி, ரொம்ப நாள் நீடிக்கவில்லை.உ.பி., தேர்தலில், காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்தார், கிஷோர். இதற்காக, அந்த கட்சியிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்றார். ஆனால், அந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அவரை யாரும் சீண்டவில்லை.
இதனால், வெறுத்துப் போயிருந்த பிரஷாந்த் கிஷோர், அமைதியாக இருந்தால், கல்லா நிரம்பாது என முடிவெடுத்து, அரசியல்வாதிகளின் ஆசையை துாண்ட துவங்கியுள்ளார்.'அடுத்த லோக்சபா தேர்தலில், எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான, பக்காவான வியூகம் என்னிடம் உள்ளது. ஆசையும், ஆர்வமும் உள்ளவர்கள், என் பக்கம் வரலாம்' என, ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.அவர், இப்படி கூறி பல நாட்களாகியும், இதுவரை எந்த கட்சியினரும், அவரைத் தேடிப் போகவில்லை என்பது தான் பெரும் சோகம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement