Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மீனவர்களுக்கு உதவும் நீர்நாய்கள்
நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக் கொண்ட ஒருவகைப் பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்துச் செல்கின்றனர். படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் சென்று மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை மேலே அனுப்புகின்றன. வலைகளுடன் காத்திருக்கும் மீனவர்கள் எளிதாக மீன்பிடிக்க இவை உதவுகின்றன. பசியுடன் இருக்கும் நீர்நாய்கள் தான் மீன்களை ஆர்வமாக தேடும் என்பதால் மீன் பிடித்தலின் போது அவைகளுக்கு உணவு அளிக்கப்படுவது இல்லை
தகவல் சுரங்கம்
அரண்மனையில் சிறை
ஆக., 8ல் மும்பையில் இரவில் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்டவு டன் மேடையில் இருந்த காந்தியடிகளும் நேருவும் கைது செய்யப்பட்டனர். காந்தியடிகள் புனேயில் உள்ள ஆகாகான் அரண்மனையில் தான் சிறை வைக்கப்பட்டார். இந்த ஆகாகான் அரண்மனை, சர் சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகாகானால், பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, கட்டப்பட்டது. ஆகாகானின் வாரிசுகள் 1969ல் இந்திய அரசுக்கு அரண்மனையை ஒப்படைத்தனர். புனேயில் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக ஆகாகான் அரண்மனை உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement