Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

முதல் இரவு இல்லாத நாடு


நார்வே - வடதுருவம் இடையே ஸ்வபார்ட் என ஒரு நாடு உள்ளது. இங்கு தற்போது இரவிலும்
சூரியன் மறைவது இல்லை. ஆகஸ்ட் 23 தேதி வரை இந்நிலையே நீடிக்கும். எனவே ஸ்வபார்ட் நாட்டில் தற்போது திருமணமாகும் தம்பதியர் முதல் இரவைக் கொண்டாட முடியாது. முதல் பகலை வேண்டுமானால் கொண்டாடலாம். ஆனால் கோடையில் இந்த நிலைமை என்றால், குளிர் காலத்தில் நிலை தலைகீழாக உள்ளது. குளிர்காலத்தில் சூரியன் கண்ணிலேயே படாது. ஸ்வபார்ட் நாடு மட்டுமல்ல துருவத்திற்கு அருகில் உள்ள நாடுகளில் இதே நிலைதான் உள்ளது. நடு இரவில் சூரியனைப் பார்க்க நிறையப் பேர் வருகின்றனர்.

தகவல் சுரங்கம்

காதல் நகரம்


இந்தியாவில் 'காதல் நகரம்' என்ற சிறப்புப் பெயரை, தாஜ்மஹால் ஆக்ரா பெற்றுள்ளது. இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்காலத்தில் இது அக்பராபாத் என்ற பெயரில் தலைநகராக
இருந்தது. சமஸ்கிருதத்தில் இது 'காட்டின் எல்லை' என்ற பொருளில் 'அக்ரவனா' என
அழைக்கப்பட்டது. அது தான் ஆக்ரா என மருவியது என்றும் கூறுவர். ஆக்ராவிலும் ஒரு
செங்கோட்டை உள்ளது. ஆனால் பிரமாண்டமான தாஜ்மஹால் இருப்பதால் ஆக்ரா
செங்கோட்டை பிரபலமாகவில்லை. சமயங்களின் ஒற்றுமைக்காக அக்பர், தீன் இலாஹியை ஆக்ராவில் தான் ஏற்படுத்தினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement