Advertisement

பக்க வாத்தியம்

பதில் சொல்லாமல் நெளிந்த அதிகாரிகள்!

மதுரையில் சமீபத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவுக்கு பதில், டி.ஆர்.ஓ., குணாளன் தலைமை வகித்தார்.
உசிலம்பட்டி, 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி விவசாயிகள், நமது நாளிதழை சுட்டிக்காட்டி, குரல் எழுப்பினர். வழக்கம் போல் பொதுப்பணித் துறை அதிகாரிகள், 'விரைவில் முடியும்' என பதிலளிக்க, கடுப்பான விவசாயிகள், 'இந்த பதிலையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்ல போகிறீர்கள்?' எனக் கேட்டனர்.
மணிகண்டன் என்ற விவசாயி, 'எங்கள் பகுதி கண்மாய் வரைபடங்களை பொதுப்பணித் துறை அலுவலகங்களில் காட்ட மறுக்கின்றனர். அதை காட்டினால் தானே, ஆக்கிரமிப்புகளை கண்டறிய முடியும்... டி.ஆர்.ஓ., தலையிட்டு, எல்லா கண்மாய்களிலும், பரப்பு, ஆயக்கட்டு, மதகு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்' என்றார்.
அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தனர்; டி.ஆர்.ஓ., காதில் வாங்காமல், அருகில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுக்கும் பாவனை காட்டினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement