Advertisement

அக்கம் பக்கம்

பாவம்; பரிதாபம்!

'ஒரு காலத்தில், எவ்வளவு செல்வாக்கான தலைவராக வலம் வந்தேன்; இப்போது, எம்.பி., பதவியை பெறுவதற்கே, இவ்வளவு அவமானப் பட வேண்டியுள்ளதே' என, புலம்புகிறார், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, அகமது படேல்.

காங்கிரஸ் நிகழ்ச்சி, பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரசாரம் போன்றவற்றில் எல்லாம், அகமது படேலை பார்க்க முடியாது. ஆனால், இவரை பார்த்தால், கட்சியின் மூத்த தலைவர்களே, அஞ்சி நடுங்குவர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்பதால் தான், இவருக்கு இவ்வளவு மதிப்பு.

தேர்தல் சமயங்களில், டில்லியில் உள்ள இவரது வீட்டின் முன், காங்கிரஸ் தலைவர்கள் வரிசை கட்டி நிற்பர். 'அகமது படேலின் கடைக்கண் பார்வை பட்டால், நமக்கு 'சீட்' நிச்சயம்' என, காங்கிரஸ் கட்சியினரிடையே, உறுதியான நம்பிக்கை உண்டு.அந்த அளவுக்கு, காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார், அகமது படேல். ஆனால், இப்போது, அவரது நிலைமை பரிதாபமாகி விட்டது.

குஜராத் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடுகிறார், அகமது. ஆனால், அங்குள்ள காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், ஒருவர் பின் ஒருவராக, பா.ஜ., பக்கம் தாவி வருகின்றனர்.இதனால், தேர்தலில் வெற்றி பெற முடியுமா, முடியாதா என்ற ஊசலாட்ட நிலையில் இருக்கிறார். 'எத்தனையோ பேருக்கு, நான், 'சீட்' வாங்கித் தந்தது போக, இப்போது நானே, இப்படி பரிதாபநிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனே' என, கதறுகிறார், அகமது படேல்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement