Advertisement

2017 டிஜே நினைவு புகைப்பட போட்டி முடிவுகள்

2017 டிஜே நினைவு புகைப்பட போட்டி முடிவுகள்

கோவையில் உள்ள லட்சுமி மெஷின் ஒர்க்ஸ்(எல்எம்டபுள்யூ)நிறுவனம் நிறுவனaf டாக்டர் டி.ஜெயவர்த்தனலு நினைவாக ஆறாவது ஆண்டாக நடத்திய டிஜே நினைவு புகைப்பட போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வைல்டு லைப் மற்றும் லேண்ட்ஸ் கேப் என இரண்டு பிரிவில் போட்டி நடத்தப்பட்டு மொத்தம் 24 படங்கள் தேர்வு செய்யப்பட்டது.இந்த படங்களுக்கு பத்து லட்ச ரூபாய் பரிசாக பகிர்ந்து வழங்கப்பட்டது.

அபூர்பா குமாரதாஸ்,பாஹன் மாதவன்,தியோடர் பாஸ்கரன் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் தேர்வு செய்யப்பட்ட சுமார் 120 படங்கள் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஸ்ரீகஸ்துாரி சீனிவாசன் அரங்கில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது, கண்காட்சி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.
போட்டியில் இரு பிரிவுகளிலும் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்த திக்வாஸ் ஹெக்டே பெலிமேன்,டெப்ராஜ் சக்ரபர்த்தி,சச்சின் ராய்,நிதின் ஜெயின் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் கண்காட்சியினை கோவை போட்டோ சென்டர் மருத்தாச்சலம் ஒருங்கிணைத்திருந்தார்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement