Advertisement

முதல் பெண் ஆட்டோ ஒட்டுனர் கவிஞர் சரோஜாவின் கனவு...


முதல் பெண் ஆட்டோ ஒட்டுனர் கவிஞர் சரோஜாவின் கனவு...

சென்னை அண்ணாசாலையில் உள்ள தினமலர் அலுவலகத்திற்குள் ஒரு ஆட்டோ நுழைந்தது,'ஒரு கலை ரசிகையின் கவிதை பயணம்' என்று எழுதப்பட்ட ஆட்டோவில் எல்லா பக்கங்களிலும் தலைவர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் படம் ஆக்ரமித்திருந்தது.எங்கே இருந்து வர்ரீங்க என்று கேட்டபோது புதுக்கோட்டையில் இருந்து (சுமார் 374 கிலோமீட்டர் துாரம்) ஆட்டோவிலேயே வர்ரேன் என்றார் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன், ஆட்டோ ஒட்டுனர் எங்கே என்று அடுத்து கேட்டபோது நான்தான் ஆட்டோ ஒட்டுனர் என்றார் இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்து அவரது கதையைக் கேட்க ஆரம்பித்தேன்.

பெயர் சரோஜா
புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர்

ஆறாம்வகுப்பு வரைதான் படித்திருக்கிறார் பல வேலைகளை பார்த்துவிட்டு ஆட்டோ ஒட்டும் தொழிலுக்கு வந்தவர் இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஒட்டுனர் இவருக்கு சிறுவயது முதலே தமிழில் கவிதை எழுதப்பிடிக்கும்.
ஆரம்பத்தில் பல்வேறு கடவுள்கள் மீது பாட்டு எழுதி அந்தப் பாடல்களை தொகுத்து இசை ஆல்பமாகவும் வெளியிட்டுள்ளார்.அதன்பிறகு பொருளாதார காரணம் காரணமாக ஆல்பம் எதுவும் வெளியிடவில்லை.


காமராஜர்,எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் அன்னை தெரசா போன்ற சமூக சேவகர்கள் சிவாஜி மனோரமா பாடகர் எஸ்.பி.பிஆரம்பித்து தல அஜீத்,நயன்தாரா வரையிலான சினிமா பிரபலங்கள் என்று எல்லோரைப்பற்றியும் பாட்டு எழுதி வைத்திருக்கிறார்.தான் எழுதிய பாடல்களை தொகுத்து சிறு சிறு கையேடு போல புத்தகம் தயாரித்தும் விநியோகித்து வருகிறார்.
பாடகர் எஸ்பிபி பற்றி எழுதி தொகுத்த புத்தகத்தை நுாற்றுக்கணக்கில் அச்சடித்து அவர் புகழ் பரப்பியபடி சென்னை வந்து அவரை பார்கலாம் என எண்ணியபோதுதான் அது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது.சரி வந்த செய்தியை தினமலரில் பதிவு செய்துவிட்டு போவோம் என்று வந்திருக்கிறார்.


என்னை ஒரு சாதாரண ஆட்டோ ஒட்டும் பெண்ணாகத்தான் பார்க்கின்றனர் எனக்குள் இருக்கும் கவிஞர் சரோஜாவை யாருமே கண்டுகொள்ளமாட்டேன் என்கிறார்கள் எனது பாடல்களை எஸ்பிபி பார்த்துவிட்டால், வரிகளை படித்துவிட்டால் நிச்சயம் பாடுவதற்கு ஒத்துக்கொள்வார் ஒரு இசை அமைப்பாளரை வைத்து பிறகு ஆல்பம் தயாரித்து வெளியிடவேண்டியதுதான் பாக்கி.
இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறேன் இன்றைக்கு என் முயற்சியில் தோற்றுப்போனாலும் விரைவில் வெற்றிபெறுவேன் என்றவர் தான் எழுதிய பல பாடல்களை ராகம் போட்டு பாடியும் காட்டினார்.இவரிடம் பேசுவதற்க்கான எண்:9842689549.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    வாழ்த்துக்கள் ...... முதலில் படைப்புக்கள் உங்களுடையதுதான் என்று சட்டப்படி உறுதி செய்து கொள்ளுங்கள் ..... எனது கவிதைகள் என்று எழுதி உங்களுக்கு நீங்களே ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பிக்கொள்ளுங்கள் ..... இது மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுடைய அறிவுரை .....

  • LAX - Trichy,இந்தியா

    வாழ்த்துக்கள் கவிஞர் சரோஜா.. உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்..

  • Manian - Chennai,இந்தியா

    மொதல்லே இளைய ராசா மாதிரி ஆளுங்க கிட்டே போகணும். ஆரம்பத்திலேயே sbb சரியில்லை. திரு முருகராஜு மூலம் முயற்சி செய்யுங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement