Advertisement

மஞ்சள் காமாலை விழிப்புணர்வு பெறுவோம்

ஆண்டுதோறும் உலக மஞ்சள் காமாலை தினம் ஜூலை 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள் அலோபதி மருத்துவத்தை நாடாமல், பிற கிராம வைத்தியத்தை நாடுவதால், நோய் தொற்றுஅதிகரித்து இறப்பு விகிதம் கூடுகின்றன. இதுபோன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற்று மஞ்சள் காமாலை நோய் தாக்கத்தில் இருந்து
பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே, உலகமஞ்சள் காமாலை தின முக்கிய நோக்கமாக இருந்துவருகிறது. இந்நாளில், நோய் பற்றி அறிவோம்.

உருவாகும் விதம் : மஞ்சள்காமாலை நோய், 22 --_60 நானோ மீட்டர் வைரஸ்நுண்கிருமிகளால் உருவாகிறது. இந்த வைரஸ் கிருமிகள் 5 வகையாக உள்ளன. ஒரு சில மஞ்சள் காமாலை குடிநீர், உணவு மூலம் பரவுகிறது. நோய் பாதித்தோர் உடலில் கத்தி, ஊசிபட்டு வெளியேறும் ரத்தத்தின் மூலமும், பால் உறவு, ரத்ததானம் மூலமும், தாயின் மூலம் குழந்தைக்கும் பரவ வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் : காய்ச்சல், பசியின்மை, வாந்தி, உடல் அசதி, வயிற்றுவலி, கண்வெண்படலம், நாக்கின் அடிப்பகுதி மஞ்சள் நிறமாக இருத்தல், மூட்டு வலி ஏற்படுவது போன்ற அறிகுறி மூலம் நோயை கண்டறியலாம். இதன் தாக்கம் 2 முதல் 6 வாரங்கள் இருக்கும்.சராசரியாக இந்நோய் 80 சதவீதம் தானாகவே குணமடையும்.ஆனால், இதை பயன்படுத்தி விஞ்ஞானத்திற்கு மாறாக தலையில் பத்துபோடுகின்றனர். காது, கண்,வாய் வழியே மருந்துகளை புகட்டுகின்றனர்.
மேலும் கீழாநெல்லிச்சாறு, மசித்த உருண்டை, கரும்பு சாறு, ஆட்டுப்பால், பழுக்க காச்சிய இரும்பினால் சூடு போடுதல், உப்பு, காரம், புளி, எண்ணெய் இல்லா உணவு போன்றவற்றைகடைபிடிக்க சொல்வார்கள். இந்நோய் தானாக குணமடையா விட்டால், பத்தியத்தை மீறி
விட்டதாக தெரிவித்துவிடுவார்கள்.

உயிரிழப்பு நிகழும் : இது போன்று சிகிச்சை எடுக்கும் நோயாளிகளில் 40 சதவீதம் பேருக்கு கல்லீரல் சுருக்கம், மண்ணீரல் பெருக்கம், வயிறுகால் வீக்கம் ஏற்படும்.இதன் மூலம்
ரத்தவாந்திஅல்லது கல்லீரல் செயல் இழந்து உயிரிழப்பு கூட நேரிடலாம். மேலும், கல்லீரலில் சுருக்கத்தால் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழப்பு நேரிடும். இந்நோய்களை குளோரோ
குயினுடன் 3 முதல்5 திறன் வாய்ந்த வைரஸ் கொல்லிகளை சேர்த்து சக்தி வாய்ந்த கூட்டு
மருந்துகளை புகட்டி 'அக்யூட்' என்ற சிலநாட்கள் வியாதியை மிக குறுகியகாலமாகிய 7 முதல்90 நாட்களிலும்,'குரோனிக்' என்றதொடர்பாதிப்புகளை 6 முதல்36 மாதங்கள் தொடர்வைத்தியத்தில் வியாதியை வேரறுத்து குணப்படுத்தலாம்.

தடுப்பு முறை என்ன : மஞ்சள் காமாலை நோய்வராமல் இருக்க, சுகாதாரமுறைப்படி கொதிக்க வைத்துஆறிய தண்ணீரை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி குடிக்கவேண்டும். எல்லா உணவு பொருளையும் சுத்தமாக தயாரித்து மூடியிட்டு வைத்திருந்து, கைகளை சோப்பிட்டு சுத்தம்
செய்தபின் சுத்தமான தட்டில் இட்டு சாப்பிடவேண்டும்.துாசி அல்லது மற்றமாசுகள் படிந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது. அனைத்துமருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும்,பல் வைத்தியர்களும் முற்றிலும் மாசு நீக்கிய உயர் அழுத்த நீராவி கலன்களில் சுத்தி
கரிக்கப்பட்ட (ஆட்டோகிளேவ்ட்)ஊசிகள் மற்றும்உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஒருமுறை உபயோகித்து கழிக்கும்ஊசிகளை மருந்து ஏற்றும்போதும், சோதனைக்கு ரத்தம்எடுக்கவும் உபயோகிப்பது சாலச்சிறந்தது.ஊசிகளை கையோலோ, பஞ்சாலோ தொட்டு மாசுபடுத்தாமலும், உடலில் தோலை ஸ்பிரிட்டால் சுத்தம் செய்த பின்னரே ஊசிபோடவேண்டும்.

தொற்றுகள் இல்லா ரத்தம் : கணவன், மனைவி இருவருள் ஒருவருக்கு மஞ்சள்காமாலை இருந்தால், முழுகுணம் அடையும் வரை உடலுறவு கூடாது. அனைத்துரத்த வங்கிகளிலும் மிகச்சிறிய 'எலைசா' பரிசோதனை செய்யப்பட்டதொற்றுகள் இல்லாத ரத்தத்தையே வழங்க வேண்டும். திட்டமிட்டு செய்யக்கூடியஅறுவை சிகிச்சைக்கு நோயாளியின் ரத்தத்தையே ஒரு வாரத்திற்குமுன் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து அறுவை சிகிச்சை யின் போது ஏற்றலாம். இந்தவியாதி குழந்தைக்கு பரவாமல்தடுக்க, தாய்க்குதடுப்பூசி போடுவது நல்லது.
இவ்வியாதியின் போதுபசி ஏற்பட்டால், இயல்பானஉணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும்.
பத்தியம் கடைப்பிடித்தால் கல்லீரல்சுருக்கம், கல்லீரல்புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள்உள்ளன.இப்புற்றுநோயைதடுத்து, முழு குணமடைய sofusbuvir400 mg என்ற நேரடி தாக்குதல் மருந்து
கண்டறியப்பட்டு அமெரிக்காவில், 60 ஆயிரம்ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இந்த மருந்தை வளரும்நாடுகளுக்கு ஆயிரம் ரூபாய்க்குவினியோகிக்க வாய்ப்பு உள்ளது.இந்தியாவில் மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உபயோகிக்க வாய்ப்புகள்அதிகம் உள்ளன.

டாக்டர்களையே அணுகவும் : மஞ்சள் காமாலை 3 லிருந்து 13 கோணங்களில் தாக்குகிறது. மனிதரை தாக்கவல்ல 15 வகை வைரஸ்களை அழிக்கிறது என கண்டறியப்பட்டுளளது. மிக கொடூரமான 'சி' கிருமியின் பெருக்கத்தை தடுக்கிறது. மஞ்சள் காமாலை நோய்தொற்று அறிகுறி தெரிந்தவர்கள்,பத்தியம் உட்பட சிலமருத்துவ முறைகளுக்கு செல்லாமல்,டாக்டர்களை நேரடியாகஅணுகி பலன் பெறுவது நல்லது.

---டாக்டர் எம்.சந்திரமோகன்
98421 33200

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement