Advertisement

சிம்ம(சொப்பன)சந்திரன்...


சிம்ம(சொப்பன)சந்திரன்...

இப்பொழுது ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி உள்ளது அதிகம் சிரமப்படாமல் அதில் அவர்கள் பயணிக்கின்றனர் இதற்கு பலர் காரணமாக இருந்தாலும் ஒருவர் மிக முக்கிய காரணமாவார்.

அவர்தான் சிம்மசந்திரன்.சிறு வயதில் போலியோவால் கால் ஊனமுற்றவர்.தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவராக இருப்பவர்.


ஒரு காலத்தில் ரயிலில் பொது பெட்டிகளில்தான் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவேண்டும், மிகவும் சிரமப்பட்டனர் இந்த நிலையில் சிம்மசந்திரன் இன்னும் சில மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு மதுரையில் எம்.பி.,யாக இருந்த மோகன் வழிகாட்டுதலில் டில்லியில் இறங்கி பாராளுமன்ற கட்டிடத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை அதன் பின் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத்தே நேரில் 'வந்து என்னய்யா உங்க பிரச்னை?' என்றபோது ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க தனி பெட்டி வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது, சில பல விவாதத்திற்கு பின் உடனே அது அமுலாக்கம் செய்யவும்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் அரசியல் சூழல் மாறி மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ரயில் பெட்டியை ரத்து செய்தார்.உடனே சிம்மசந்திரன் சக மாற்றுத்திறானிகளுடன் கல்கத்தாவில் உள்ள மம்தாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நான் உத்திரவு போட்டது போட்டதுதான் மாற்றமுடியாது என மம்தா சொல்லிவிட அவரது வீட்டருகில் கொட்டும் மழையில் ஒரு வாரகாலம் அறப்போராட்டம் மேற்கொண்டார்.பின் மம்தா இறங்கிவந்து பழையபடி தனிப்பெட்டி வழங்க உத்திரவு பிறப்பித்தார்.
வேலை கேட்டு நீண்ட காலம் அலைக்கழிக்கப்பட்ட 70 மாற்றுத்திறனாளிகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.போராட்ட பந்தலுக்கே வந்த அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அனைவருக்கும் அந்த இடத்திலேயே வேலை போட்டுத்தந்தார்.

ஆனால் அதிகாரிகள் அவர்களை இல்லாத வேலை கொடுத்து அந்த வேலை இல்லாத ஊர்களுக்கு அலையவிட்டனர். சிம்மசந்திரன் கவனத்திற்கு விஷயம் வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளுடன் நேரில் போய் பார்வை இல்லாத இவர்களை ஏமாற்றி அலையவிடுவது என்ன நியாயம் என்று கேட்டு விவாதமும், போராட்டமும் நடத்தியபின் அவரவருக்கு பழகிய ஊரில் வேலை போட்டுக் கொடுக்கப்பட்டது.
பாலத்தில் மூன்று சக்கர சைக்கிளை ஒட்டிச்செல்ல முடியவில்லை ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கவேண்டும் என்று கேட்டு வாங்கியவர்.

ரயில் ஏறுவதற்காக நடைமேடையில் நீண்ட துாரம் மாற்றுத்திறனாளிகள் நடக்கமுடியாது என்பதற்காக பேட்டரி கார் ஏற்பாடு செய்தவர்.எக்மோர் ரயில் நிலையத்தை எஸ்கலேட்டர் அமைய காரணமானவர்.
மாற்றுத்திறனானிகளை குறைத்தும் கேலியாகவும் சித்தரித்து வந்த சினிமாக்களுக்கு எதிராக போராடி சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கச் செய்ததுடன் அந்த சினிமா இயக்குனர்களை மன்னிப்பும் கேட்கவைத்தார்.


இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அங்கே அடுத்த நிமிடம் ஆஜராகிவிடுவார் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே சிம்ம சொப்பனம்தான்.
அதற்காக இவரை ஒரு முழுமையான பேராளியாக கருதிவிடவேண்டியது இல்லை இவருக்குள் இருக்கும் மனித நேயம் மகத்தானது.

மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு மனசு இருக்கிறது அந்த மனசுக்கு ஏற்ற மனசு உள்ளவர்களை தேடிக்கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று எண்ணி கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இதுவரை 437 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார் அனைவரும் நல்ல முறையில் ஊனமில்லாத நல்ல குழந்தைகளைப்பெற்று குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.இவரது இந்த உயரிய சேவையைப் பார்த்து கீதாபவன் அறக்கட்டளையானது ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை சீர் வரிசை வழங்குகின்றனர்.மேலும் இவர்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் சிம்ம சந்திரன் பெற்றுத்தந்துவிடுகிறார்.இதன் காரணமாக மிகச்சிறந்த சமூக சேவகர் என்ற விருதினை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுள்ளார்.


இதோ 2017ம் ஆண்டிற்கான சுயம்வரத்திற்கு சிம்மசந்திரன் தயராகிவிட்டார்.மாவட்டவாரியாக சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உதவியுடன் முதல்கட்டமாக ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு பின் அவர்களுக்கு சென்னையில் 20/11/2017 ந்தேதி திருமணம் நடத்திவைக்கப்படும். இப்போது மாவட்ட வாரியாக சுயம்வரம் நடந்துகொண்டு இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகளோ அல்லது மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களோ சிம்மசந்திரனை தொடர்புகொள்ளவும் அவரது எண்:9444115936,044-22251584.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • sudharshana - chennai,இந்தியா

  vaazhththukkaL

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  மனதில் ஊனம் உடையவர்களைவிட உடல் ஊனம் பெரிய விஷயமில்லை என்பதை உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

 • spr - chennai,இந்தியா

  பாராட்டுகள் இவரை உதவி ஜனாதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கலாம் ஆனால் எதிர்க்கட்சிகள் ஏன் செய்யவில்லை தலித் மக்களுக்காக என உயிரையும் தந்திருப்பேன் ஆனால் இருப்பதோ இவரு உயிர் அதனைக் கொடுத்துவிட்டால் அடுத்துப் போராட இயலாது என்பதால் தரவில்லை என்று சொல்லும் "பெரியவர்கள்" இருக்கையில், இவர் வித்தியாசமானவர்

 • MaRan - chennai,இந்தியா

  முழுமையான சேவை வாழ்க அய்யா ஊனமில்லாதவர்களை விட நீங்க வலுவாக இருக்கிறீர்கள்

 • seyadu ali - tamilnadu,இந்தியா

  ஐயா உங்களை மனமார வாழ்த்துகிறேன் நீங்கள் நீடுழி பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .ஊனம் என்பது மனித உயர்வ்க்கு ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு உத்தமர் நீங்கள் .உங்கள் பணி சிறக்க நீங்கள் பல்லாண்டுபல்லாண்டு வாழவேண்டும்

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  லாலு பிரசாத் எவ்வளவோ ஊழல் செய்திருந்தாலும் இந்த ஒரு நன்மைக்காக லாலுவை பாராட்டலாம்.

 • Manian - Chennai,இந்தியா

  உள்ளத்தில் ஊனம் இல்லாதவர். மாற்றுத் திறனாளி துன்பம் பெற்றதால், அதின் வலியை இவருக்கு உணர்த்தி, அதன் மூலம் மற்றவர்கள் பயன் பெற பிறந்தவர். மறபணுக் கோளாறு உடலை வாட்டலாம், உறுதியை வாட்டக் கூடாது என்ற உள்ளத்து ஒளி பெருகிய மாற்றுத்திறாளிகள் இறக்கத்தை விரும்பாதவர்கள். புரிதலையோ எதிர்பார்க்கிறார்கள். குருடன், செவிடன், நொண்டி,முடம் என்ற சொற்கள் மூடர்கள் வாய்மொழி. ஒரு வியாதி, ஒரு ஆக்ஸிடெண்டு, பட்ட பந்தடி போன்றவை உங்களையும் உடல் ஊனர்களாக மாற்றிவிடும். அமெரிக்கா போன்ற நாடுகளில், வயோதிகர்கள், மாற்றத்திறனாளிகளுக்கே எங்கும் முதல் உறிமை. திராவிடர்கள் என்று மார்தட்டுமுன் இவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் பணி மூப்படைந்தவர்கள் இவருடன் சேர்ந்து பணியாற்றுவார்களா?.ஆண்டவன் இந்த தொண்டருடன் எப்போதும் இருப்பதால், உள்ளத்தாவ் உயர்ந்த இவர் வணக்கத்துக்கு உரியவர்.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வணங்குகிறேன்

 • Gopi - Chennai,இந்தியா

  ஐயா நீடுழி வாழ்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement