Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: ஆண்டுக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி அமைப்பதை, அரசு கொள்கையாக வைத்து உள்ளது.


டவுட் தனபாலு: கொள்கையாகவே வச்சிருந்தா எப்படி... அதை எப்போ செயல்படுத்தப் போறீங்க... ஏன் இந்த, 'டவுட்'னா, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரங்களில், நீங்க எந்த அளவுக்கு மெத்தனமா செயல்படுறீங்க என்பதைத் தான், தமிழக மக்கள் பார்த்து வர்றாங்களே...!



காங்., செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா:
மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி, 14 ஆண்டுகளாக தோல்வி அடைந்து வருவதற்கு, மாநில கட்சி தலைமையகத்தில் உள்ள வாஸ்து குறைபாடே காரணம்.




டவுட் தனபாலு: காங்கிரசின் வெற்றிக்கு கட்சித் தலைவர்களால் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு இதைவிட வெளிப்படையாக யாராலும் ஒப்புக்கொள்ள முடியுமா என்பது, 'டவுட்' தான்... இதைத்தான், 'பாடத் தெரியாத பாகவதர், பக்கவாத்தியம் பத்தலைன்னு சொன்னாராம்'னு, எங்க ஊர்ல சொல்லுவாங்க...!



-காங்.,கைச் சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா:
கர்நாடகாவின் சாமுண்டீஸ்வரி தொகுதியில், ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதி மக்களின் அன்பின் காரணமாகவும், விருப்பத்தின் காரணமாகவும் தொடர்ந்து தேர்வாகி வருகிறேன். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல், எனக்கு இறுதிக்கட்ட தேர்தலாகக்கூட அமையலாம்.



டவுட் தனபாலு: அடுத்தும் சாமுண்டீஸ்வரி தொகுதி யில் தான் போட்டியிடப் போறீங்க... அதுக்குத் தான் இந்த உருக்கமா... இந்த விஷயத்தில், நீங்க யாரை பின்பற்றி வர்றீங்க என்பது, கர்நாடக மக்களுக்குத் தெரியுதோ, இல்லையோ, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமத் தெரிஞ்சிடுச்சு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement