Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார்: துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

டவுட் தனபாலு: கட்சி, யார் கட்டுப்பாட்டில் இருக்குங்கற, 'டவுட்'டே தீரலை... இதுல, நீங்க யாரைக் குறிப்பிடுறீங்க... ஜனாதிபதி வேட்பாளர் யார் என, தெரியாததற்கு முன்னமே, ஏகமனதாய் ஆதரவளித்து, மனு தாக்கலுக்கு டில்லி வரை சென்று உத்தரவாதம் கொடுத்த நீங்க, துணை ஜனாதிபதி தேர்தலில் மட்டும், காங்கிரஸ் வேட்பாளரையா ஆதரிக்க போறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுடன், முதல்வர் பழனிசாமி ரகசிய கூட்டணி அமைத்துள்ளார்.

டவுட் தனபாலு: 'பழனிசாமி அரசு குறித்து, தப்பித்தவறிக் கூட சட்டசபையில் வாய் திறக்காத பன்னீர்செல்வம் தான், அவரோடு கூட்டணி வைத்திருக்கிறார்... இதை இல்லை என சட்டசபையில் மறுக்கும் துணிச்சலும், தெம்பும் பன்னீர்செல்வத்துக்கு இருக்கா?'ன்னு, ஸ்டாலின் எழுப்பிய, 'டவுட்'டுக்கு, உங்களிடம் இருந்து ஒரு அசைவும் இல்லையே... இதுக்கு என்ன காரணம்...?

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி: நடிகர் கமல்ஹாசன், ஆதாரமின்றி அரசை விமர்சித்து வருகிறார். இது தொடர்ந்தால், தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்.

டவுட் தனபாலு: அனைத்து துறைகளிலும் ஊழல்னு கமல் சொன்னது, உங்களுக்கு இவ்வளவு ஆவேசத்தை ஏற்படுத்துது... ஆனா, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டணும்னு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, உங்க கட்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் அணியினர் கூறுவதை கண்டுக்க மாட்டேங்குறீங்க... என்ன உங்க, 'லாஜிக்' என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement