Advertisement

அக்கம் பக்கம்

நிம்மதி வந்தாச்சு!

முதல்வராக பதவியேற்று, ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்ட நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன் முகத்தில், இப்போது தான், மகிழ்ச்சி தென்படுகிறது.முதல்வராக பதவியேற்பதற்கு முன், பெரும் போராட்டத்தை, அவர் சந்திக்க வேண்டியிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான, அச்சுதானந்தனின் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.

மார்க்சிஸ்ட் மேலிடம், அச்சுதானந்தனை கழற்றி விட்டதால், கடைசி நேரத்தில், பினராயி விஜயனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. முதல்வர் பதவியில் அமர்ந்தாலும், சட்டம் -- ஒழுங்கு பிரச்னை, எதிர்க்கட்சிகளின் சவால் போன்றவற்றால், நிம்மதியை தொலைத்தவராக வலம் வந்தார், பினராயி விஜயன்.கடந்த ஒரு ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும், எந்தெந்த வளர்ச்சி திட்டங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளன; எதில் பின்தங்கியுள்ளன என்பது பற்றிய ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில், பெரும்பாலான வளர்ச்சி திட்டங்களில், கேரளாவே முதலிடம் பிடித்திருந்தது.
இதற்கு பின் தான், பினராயி விஜயன் முகத்தில், புன்னகையையே காண முடிகிறது. 'கடுமையான விமர்சனங்கள், நெருக்கடிகள் இருந்தாலும், இதுபோன்ற பாராட்டுக்களை கேட்கும்போது, கஷ்டம் எல்லாம் மறைந்து விடுகிறது' என, பெருமிதத்துடன் கூறுகிறார், பினராயி விஜயன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement