Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மாறாத மருத்துவ முறை
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதற்கேற்ப அமைந்ததுதான் ஓமியோபதி. சின்கோனா மரத்து இலைகளை கஷாயம் வைத்துச் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் வந்தது. பின்னர் அதே இலைகளை, தகுந்த அளவில் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் குணமானது. இதுதான் ஓமியோபதியின் தந்தை டாக்டர் ஹானிமனின் வாழ்க்கையில் திருப்புமுனை. ஹானிமன் 1790ல் நிரூபணம் செய்த சின்கோனா மருந்து அன்றைக்கு என்ன அறிகுறிகளைத் தோற்றுவித்ததோ, அதே அறிகுறிகளுக்கு அன்றும் இன்றும் ஒரே மருந்துதான். அந்த நாள் முதல் இந்த நாள் வரை மாறாத மருத்துவ முறையாக ஓமியோபதி உள்ளது.
தகவல் சுரங்கம்
ஆடிமாதப் பழமொழிகள்
ஆடிமாதப் பழமொழிகளில் பல வார்த்தை விளையாட்டாகவும், அர்த்தத்துடனும் உள்ளன. 'ஆடி அழைத்து வரும்' 'ஆடி வரிசை தேடி வரும்' என்ற பழமொழிகள் ஆடி மாதத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் வருவதைக் குறிக்கிறது. ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற, என்ற பழமொழி ஆடியை தொடர்ந்து வரும் பண்டிகைகளுக்கு இனிப்புகள் செய்ய வெல்லம் அவசியம் என்பதை காட்டுகிறது. தை மாதத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகம் என்பதால் காய்கறி வத்தல் செய்ய உப்பு அவசியம் என்பதை காட்டுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement