Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

ஏழைகளின் ஆப்பிள்


விலை குறைவு என்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. இன்று
ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விலை உள்ளது. நம்மூர் சமையலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள தக்காளி, இத்தாலி நாட்டு 'பீட்சா' உணவிலும் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. விளைந்தால் விலையில்லை, விளையாவிட்டால் விற்பனை எல்லை என்பதே தக்காளியின் நிலை. செடி தக்காளி தரையில் படர்ந்து வளரக்கூடியது. சிறிது மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகி விடும். இதனால் மழை, வெயில் நேரத்தில் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இவற்றை சமாளிக்க கொடிதக்காளி
பரிந்துரை செய்யப்படுகின்றது.

தகவல் சுரங்கம்

தலைப்பெழுத்தில் தடுமாற்றங்கள்


பெயருக்கு முன்னால் குறிக்கப்படும் முதல் எழுத்து என்பது தமிழக கலாசாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து,தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தந்தை பெயரின் முதல் எழுத்தை தலைப்பெழுத்தாக குறிப்பது தான் வழக்கம். பெற்றோர் இருவரின் பெயர்களின் முதல் எழுத்தையும் தலைப்பெழுத்தாக தற்போது வைக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளை பொறுத்தவரை தலைப்பெழுத்தை வைப்பதில் தெளிவான சட்ட, திட்டங்கள் இல்லை. ஊர் பெயரும் தலைப்பெழுத்தாக வரலாம். மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆனார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement