Advertisement

அக்கம் பக்கம்

உச்சக்கட்ட அவமானம்!

மன்மோகன் சிங் தலைமையிலான, முந்தைய, காங்., ஆட்சியில், வி.வி.ஐ.பி.,க்கள் பலருக்கு, கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான், இந்த பாதுகாப்பை அதிகமாக அனுபவித்து வந்தனர்.

பா.ஜ., அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 'பாதுகாப்பு என்ற பெயரில், வெட்டியாக, மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதா?' என, ஆவேசப்பட்ட பிரதமர் மோடி, கவுரவத்துக்காக மட்டும் பாதுகாப்பு வசதியை பெற்றவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டார்.

எந்த, வி.ஐ.பி.,யின் உயிருக்கு, உண்மையிலேயே அச்சுறுத்தல் உள்ளதோ, அவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கான பாதுகாப்பு, 'வாபஸ்' பெறப்பட்டது.இந்த அதிரடியால், அதிகம் பாதிக்கப்பட்டவர், காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மணீஷ் திவாரி தான்.

எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், வெட்டியாக, கறுப்பு பூனைப் படை பாதுகாப்பை பெற்று வந்தவர்களில் இவரும் ஒருவர். இவர், வீட்டை விட்டு புறப்பட்டாலே, சாலையில் செல்வோர் எல்லாம், அலறியடித்து ஓட வேண்டியிருக்கும்; அந்த அளவுக்கு, 'பில்டப்' இருக்கும்.பா.ஜ., அரசு பதவியேற்றபின், மணீஷ் திவாரியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. லேட்டஸ்டாக, திவாரியின் பாதுகாப்பு, மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே, அவருடன்
செல்கின்றனர்.இதைப் பார்த்து விரக்தி அடைந்துள்ள திவாரி, 'இது, உச்சக்கட்ட அவமானம்' என, புலம்புகிறார்.

நண்பனா; எதிரியா?

'நம் எதிரி, நமக்கு அருகிலேயே இருப்பான் என்ற பழமொழி, என் விஷயத்தில் உண்மையாகி விட்டது' என, புலம்புகிறார், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவருமான, சந்திரசேகர ராவ்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம், அங்கு ஆளும் கட்சியாக உள்ள தலைவர்கள் மீதான பழைய வழக்குகளை துாசு தட்டி வருகிறது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு.இதனால் பீதியடைந்துள்ள, சந்திரசேகர ராவ், 'நமக்கு எதற்கு வம்பு' என, மத்திய அரசு என்ன செய்தாலும், அதை, முதல் ஆளாக ஆதரிக்கிறார்.ஜி.எஸ்.டி., வரி விதிப்பையும், இப்படித் தான், அவர் ஆதரித்தார். இதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும், ஜி.எஸ்.டி.,க்கு ஆதரவாக பேசி வருகிறார்.

ஆனால், சட்டசபையில், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிதி அமைச்சர், எடலா ராஜேந்திரா பேசியபோது, ஜி.எஸ்.டி.,யை கடுமையாக விமர்சித்தார்.'இந்த வரி விதிப்பு முறையால், மாநில அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். மாநில அரசை பழி வாங்குவதற்காகவே, மத்திய அரசு, இதைச் செய்துள்ளது' என, கடுமையாக விமர்சித்தார், ராஜேந்திரா.

இதைக் கேட்ட, சந்திரசேகர ராவ், பீதியில் உறைந்து விட்டார். 'இந்த ஆள், நம்ம கட்சிக்காரன் போல் பேசாமல், எதிர்க்கட்சிக்காரன் போல் பேசுகிறாரே; மத்திய அரசுக்கு தெரிந்தால், நம் பாடு, திண்டாட்டம் தான்' என, அருகில் இருந்த, சக அமைச்சரிடம் புலம்பி தீர்த்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement