Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
உலக விதை வங்கி
மாறிய விவசாயத்தால் விதை நெல்கள் விளைவதுஇல்லை. கடை விதைகளே பயன்தருகின்றன. உலக வங்கியை போன்று உலக விதைகள் வங்கி, நார்வே நாட்டுக்கு சொந்தமாக உள்ள ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் உள்ளது. பேரழிவு ஏற்பட்டால் அடுத்த உலகுக்கு இன்றைய உலகின் தாவர வகைகள் பாதுகாத்து தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விதை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. கடினமான பாறைகளை குடைந்து இந்த விதை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் உள்ள இந்த விதைகள் பாதுகாப்பு பெட்டகத்துக்குள் முளைத்து விடாதபடி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.
தகவல் சுரங்கம்
ஆடி மோதிரம்
மோதிரம் என்பதற்கு விரலணி, ஆழி, போன்ற சொற்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் மோதிரத்திற்கு அங்குலியா என்று பெயர். ஆடியில் புதுமாப்பிள்ளைக்கு, மோதிரம் அணிவிப்பர். அனைத்து நகைகளையும் துறந்து கானகம் சென்றாலும், இதிகாசத்தில் ராமன் தனது திருமண மோதிரத்தை கழட்டவில்லை. கம்பரது ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் 'வண்ணமோதிரம்' என்ற சொல் வருகிறது. திருமணத்தன்று மாமனார் வீட்டில் அணியும் மோதிரத்தை மையமாகக் கொண்டு, 'தாலி கட்டிய கைக்கு தங்க மோதிரம்' என்னும் பழமொழி வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement