Advertisement

இது உங்கள் இடம்

கூத்தாடி ஆட்சி இல்லாட்டி நாடு உருப்படும்!


என்.நக்கீரன், ராமேஸ்வரத்திலிருந்து எழுதுகிறார்: 'பீஹார் மாநிலத்தை விட, மிகவும் ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் மாறி விட்டது' என, 'உலக நாயகன்' கமலஹாசன் கூறியுள்ளார்.'நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது' என்பர்; அவ்வளவு அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ, அரசியல் இருக்கக்கூடும் என நினைத்து, அப்படி அவர் சொல்லி இருப்பாரா...தமிழகம், ௧௯௬௭ வரை, புண்ணிய மாநிலமாகத் தான் இருந்தது. அன்று, அரசியலை ஒரு புனித சேவையாக நினைத்த உத்தமர்கள், தலைவர்களாக இருந்தனர். சிவன் சொத்து குல நாசம் என்பது போல், அரசியல்வாதிகள் மனசாட்சிக்கும் பயந்து நடந்தனர். அதனால் தான், சாகும்போது கூட, இரண்டு வேட்டிகளும், ௨௪ ரூபாயும் வைத்து விட்டு தலைவர்கள் மறைந்தனர்.அவர்களுக்கு விஞ்ஞான ரீதியாகவோ, மெய்ஞான ரீதியாகவோ ஊழல் செய்து பணம் சம்பாதிக்க தெரியவில்லை. தமிழக சட்டசபையும், மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன் கோவில் போல், புனிதமாக இருந்தது. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட்டார். அப்போது, சினிமா துறை மட்டுமே சாக்கடையாக இருந்தது.நடிகை விஷயத்தில், தியாகராஜ பாகவதரும், பத்திரிகையாளர் கொலை வழக்கில், கலைவாணரும் சிறை சென்றனர். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற திரைப்பட துறையினர் அரசியலுக்கு வந்த பின்தான், தமிழக அரசியலும், சினிமாத் துறை போன்று, சாக்கடையாக மாறியது.சினிமாவில், கோடி கோடியாக சம்பாதித்தோர் எல்லாம், தமிழக அரசியல்வாதிகளாக வேஷம் போட துவங்கினர். பின், எந்த எந்த வழிகளில் கோடி கோடியாக சம்பாதிக்க முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் பணம், சொத்து சம்பாதிக்க துணிந்தனர்.
'உலக நாயகன்' கமலஹாசனுக்கு சொல்ல வேண்டியது இவை தான்... பீஹாரை போல், ஊழல் மலிந்த மாநிலமாக, தமிழகம் வந்ததற்கு காரணம், உங்களை போன்ற, சினிமா துறையினர் வந்ததால் தான், என்பதை தவிர வேறு ஏதும் இல்லை.இனியாவது, சினிமாத் துறையினர், அரசியலுக்கு வராமல் ஒதுங்கினால், நல்லவர்கள் தலைமையில் தமிழகம் தலை நிமிரும்!


தியேட்டர் பக்கம்எட்டி பார்க்கமாட்டார்கள்!

கு.காந்திராஜா, எண்ணுார், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், அரசுடன் பேச்சு நடத்திய, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.ரத்து செய்யப்பட்ட தமிழக அரசின் பழைய வரியை கழிக்காமல், டிக்கெட் கட்டணம், 120 ரூபாயுடன், கூடுதலாக, ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்து, புதிய கட்டணத்தை நிர்ணயித்து உள்ளனர்.இதன் மூலம், தியேட்டர் உரிமையாளர்கள், 48 சதவீத அளவிற்கு, டிக்கெட்களின் மீது கட்டண உயர்வு செய்துள்ளனர்.முன்பு இருந்த, 120 ரூபாய் டிக்கெட்டின் உண்மையான மதிப்பு, 83.30 ரூபாய் மட்டுமே. ஆனால், பழைய கேளிக்கை வரி, -35 ரூபாய், இதர வரி, -1 ரூபாய் என, 120 ரூபாய் வசூலிக்கப்பட்டது; இப்போது கேளிக்கை வரி, இதர வரிகள் கிடையாது.அதன்படி, 83.30 கட்டணத்துடன், 28 சதவீத கேளிக்கை வரி சேர்க்கப்பட்டு, டிக்கெட்டின் கட்டணம், 106.55 ரூபாயாக இருக்க வேண்டும். இது, 83.30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆகவே, டிக்கெட் கட்டணத்தில், 14 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 120 ஆக நிர்ணயித்து இருந்தாலும், நியாயமானது என, ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால், ஒரேயடியாக, ௧55 ரூபாய் என, கட்டணத்தை நிர்ணயித்து இருப்பது பகல் கொள்ளை; அதிலும், ஜி.எஸ்.டி., வரி மீது பழி போட்டு, திரையரங்கு உரிமையாளர்கள் தப்ப பார்க்கின்றனர்.திரையரங்குகளின் ஸ்டால்களில், உணவு பண்டங்களின் விலை, 10௦ சதவீதம் வரை அதிகமாக விற்கப்படுகின்றன. திரையரங்குகளின் அநியாய கட்டண உயர்வை ரத்து செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடிகர், நடிகையருக்கு, 10, 20 கோடி என, சம்பளத்தை வாரி வழங்கி, அந்த செலவை, சாதாரண ஏழை மக்கள் தலையில் சுமத்த முயற்சிக்கின்றனர், சினிமா துறையினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்.ஏழை, நடுத்தர மக்கள், இனி திரையரங்கு பக்கம் நிச்சயம் எட்டி பார்க்க மாட்டார்கள்!


கூடுதல் கல்விதகுதியைமிதிக்காதீர்கள்!


வி.தமிழ் ஆசை, பாண்டிய ராஜபுரம், வாடிப்பட்டி, மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சமுதாயத்தில், ஒருசிலர், தன் வாழ்வில் கல்விக்கு முதலிடம் கொடுத்து, அனைத்து பாடங்களையும் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில் படிக்கின்றனர்; கூடுதல் பட்டங்கள் பெறுகின்றனர்.அதன் மூலம் கல்விஅறிவை நன்கு வளர்த்து, தன்னால் முடிந்த சேவைகளை சமுதாயத்திற்கு செய்து வருகின்றனர். ஆனால், அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.அதிகமான பாடங்களை படித்து, கூடுதல் பட்டம் பெறுவோரை ஊக்குவிக்கும் வகையில், அதிக பட்டம் பெற்றவர்களின் நிலையை உயர்த்த, தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில், 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுவது போல், கூடுதல் பட்டங்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.அப்போது தான், ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்க நினைப்போர், அதிக பட்டங்கள் பெறுவர். தானும் சிறந்த கல்வி பெறுவதுடன், மாணவர்களையும் திறமையானவர்களாக உருவாக்குவர்.
இதேபோல், உதவி பேராசிரியர் பணி நியமனத்திலும், கூடுதல் பட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதவி பேராசிரியர் பணி நியமனத்தின் முன் அனுபவத்திற்கு, ஒரு ஆண்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.அது போல், கூடுதல் முதுகலைப் பட்டத்திற்கு, இரண்டு மதிப்பெண்களும், இளம்கலை பட்டத்திற்கு, ஒரு மதிப்பெண்ணும் வழங்கினால், தரமான, சிறப்பானோர் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற விரும்பாமல், சிலர் சுய கல்வி சேவை மையங்களை நடத்துகின்றனர். அவர்கள், 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்விலும், 'செட்' எனப்படும், மாநில தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆனால், பணி அனுபவம் இல்லாத காரணத்தால், உதவி பேராசிரியர் பணிக்கு சேர, அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களின் நலன் கருதி, கூடுதல் பட்டம் பெற்றோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதிக பட்டம் பெற்றோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால், அவர்களுக்கு கல்வி மீது கூடுதல் ஆர்வம் ஏற்படும். இது, கல்வி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
அனைத்து வேலைவாய்ப்புகளிலும் கூடுதல் கல்வி தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க, அரசு முன்வருவது சாலச் சிறந்தது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    ஒரு காலத்தில் நாடகங்கள் புகழ் பெற்று இருந்தன. சினிமாவினால் பெரும்பாலான நாடகங்கள் முடிந்து விட்டன. மொபைல் டிவி யுகத்தில் சினிமா தியேட்டர்கள் மிக விரைவில் மூடு விழா காண போகின்றன. பொது மக்களாகிய நாம் திரை அரங்குகளை கண்டு கொள்ளாவிட்டால் டிக்கெட் விலை குறையும் அல்லது திரை அரங்குகள் மூடப்படும்.

  • T.S.SUDARSAN - Chennai,இந்தியா

    நான் சினிமா செல்வதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது . பாகுபலி திரைப்படம் சினிமா சென்று பார்த்தேன். இனிமேல் அதற்கும் தடை.

  • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

    தியேட்டர்களை மக்கள் கொளுத்தும் நாள் விரைவில் வரும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement