Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜு: திரைப்பட விருதுகள் அறிவிப்பில், அரசியல் ஏதுமில்லை. ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் விருதுகள் வழங்கிட எண்ணி இருந்தார்.


டவுட் தனபாலு: ஆண்டுதோறும் வழங்க வேண்டிய விருதுகள், 2009ல் இருந்து தொடர்ந்து அறிவிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்... முக்கியமாப்படலை யா... இல்லை, ஏதும் முட்டுக்கட்டை இருந்ததா... ஆட்சியை ஒருபோதும் விமர்சிக்காத திரைத்துறையினர், இப்போ குற்றச்சாட்டு கூறும் அளவுக்கும், போராட்டம் நடத்தும் அளவுக்கும் வந்தபின், இந்த அறிவிப்பு வருவது, 'டவுட்'டை ஏற்படுத்தத்தானே செய்யும்...!



பன்னீர் ஆதரவு, முன்னாள் அமைச்சர் முனுசாமி:
சசிகலா சிறையில் இருந்தாலும், அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார், பினாமி முதல்வரான பழனிசாமி.

டவுட் தனபாலு: சசிகலாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்தக் கூடாதுன்னு சொல்றீங்களா... சிறையில் இருப்போரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்தக் கூடாதுன்னு சொல்றீங்களா... ஏன் இந்த, 'டவுட்'னா, இதே சொத்து குவிப்பு வழக்குல, ஜெ., சிறையில் இருந்த போது, முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த பதவிக்குரிய நாற்காலியில் கூட அமரலையே... அதனால் தான், இந்த கேள்வி...!



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:
ஜெ.,வின் ஆட்சியைப் போல், பழனி சாமி அரசும், வெறும் அறிவிப்பு அரசாக உள்ளது.



டவுட் தனபாலு: எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற உங்க கட்சிக்கு, இன்னைக்கு ஒரு, எம்.எல்.ஏ., கூட இல்லை... அதற்கு என்ன காரணம்னு, யோசித்தீங்களா... அரசு, வெறும் அறிவிப்பு அரசாக இருக்குன்னு குற்றஞ்சொல்லும் நீங்க, வெறும் அறிக்கை அரசியல் வேலைக்கு ஆகாது என்பதை, எப்போஉணரப் போறீங்க என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement