Advertisement

அக்கம் பக்கம்

டுவிட்டருக்கே ஓட்டு!



தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவின் மகன், ராமா ராவ், அந்த மாநிலத்தின் தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.கட்சி பணிகள், தன் இலாகா சார்ந்த வேலைகளை, மிகவும் சுறுசுறுப்பாக செய்து, அனைவரது பாராட்டுகளை பெற்றுள்ளார், ராமா ராவ். ஆனால், சாதாரண மக்களிடமிருந்து, அவர் ரொம்பவே விலகி இருப்பதாக, முணுமுணுப்பு எழுந்துள்ளது.கட்சிக்காரர்கள் பலரும், தங்களுக்கு உள்ள பிரச்னைகளை, எழுத்து மூலமாக, ராமா ராவின் அலுவலகத்தில், மனுக்களாக கொடுத்து வருகின்றனர். அதே போல், பொதுமக்களும், தங்கள் குறைகள் குறித்து, மனுக்களை கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது, ராமா ராவ், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இது குறித்து, ராமா ராவின் அலுவலகத்தில் இருப்பவர்களிடம், பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளிடம் கேட்டால், அவர்கள் கூறும் காரணம், விசித்திரமாக உள்ளது.'எழுத்து மூலமாக அளிக்கப்படும் மனுக்களை பார்ப்பதற்கு, சாருக்கு நேரம் இல்லை; அவற்றை பார்க்கவும் தெரியாது. அதனால், சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் உங்கள் பிரச்னைகளை தெரிவியுங்கள்; உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்கின்றனர்.கடுப்பான பொதுமக்களோ, 'அப்படியானால், அடுத்த தேர்தலில், டுவிட்டருக்கு ஓட்டுப் போடுகிறோம். உங்கள் சாரை, எங்கள் ஏரியா பக்கம் தலைகாட்டச் சொல்லாதீர்கள்' என, ஆவேசமாக கூறுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement