Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பெயர் இல்லாக் கறி


ஆடியில் பறப்பன, ஊர்வன, நகர்வன, ஓடுவன என விதவிதமான அசைவ உணவுகள், விதவிதமான பெயர்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒருவகை அசைவ உணவுக்கு மட்டும் பெயர் சொல்லக்கூடாது என்பது மரபாக கருதப்பட்டு அது பெயர் இல்லாக் கறியாக உள்ளது. 'வெருகு' என்ற விலங்குக்கறி சில கிராமங்களில் ஆடி மாதத்தில் உண்ணப்படுகிறது. வயோதிக காலத்தில் உள்ள பூனைக்கே வெருகு என்று பெயர். இதன் பார்வையே அச்சந்தரும் என்பதால் தான் வெருகுப் பார்வை என்ற வார்த்தை வந்தது. வெருகுப் பூனை வெட்ட படுவதில்லை. தீயில் வாட்டியே உண்ணப்படுகிறது.

தகவல் சுரங்கம்

ஆடிக் கும்மாயம்


கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று அகராதியில் அர்த்தம் உள்ளது. கும்மாயம் என்பது, செட்டிநாட்டு பலகாரம். பச்சரிசி, பால், வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகை. நெல்லை மாவட்டத்தில் கும்மியானம் என்ற பெயரில், ஆடி மாத இறுதியில் கும்மாயம் தயாரிக்கப்படுகிறது. இதனை 'ஆடி கும்மாயம்' என்று அழைப்பர். பெருமாள் கோயில்களில் தான் கும்மாயம் விசேஷம். 'கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி' என்று முதல் திருமொழியில் பெரியாழ்வார் பாடுகின்றார். மணிமேகலைக் காப்பியத்தில் 27ம் காதையில் 'பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி' என்னும் தொடர் இடம் பெற்றுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement