Advertisement

அக்கம் பக்கம்

காலை வாருவாரா மீரா?

'ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே... இவங்க குணத்துக்காகவே, ஓட்டுப் போடலாம் போலிருக்கிறதே' என, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை பற்றி, நெகிழ்ச்சியாக பேசுகிறார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால்.விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்., தலைமையிலான, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.முக்கியமான கட்சிகள், இரு அணிகளாக பிரிந்து, ஒரு தரப்பினர், ராம்நாத் கோவிந்திற்கும், மற்றொரு தரப்பினர், மீரா குமாருக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.டில்லியில், ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்த கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு, மோடியும் பிடிக்காது; சோனியாவும் பிடிக்காது. இதனால், மவுனமாக இருந்தார்.இதையறிந்த மீரா குமார், போன் மூலமாக, கெஜ்ரிவாலிடம் பேசி, 'எனக்கு ஆதரவு தரலாமே' என, பணிவுடன் கேட்டார். கெஜ்ரிவாலுக்கு ஆச்சரியம் தாளவில்லை. 'காங்கிரஸ்காரராக இருந்தாலும், 'ஈகோ' பார்க்காமல், நம்மிடம் பேசுகிறாரே' என, கட்சிக்காரர்களிடம் தெரிவித்தார்.ஆம் ஆத்மி நிர்வாகிகளோ, 'அந்த அம்மாவுக்கு, இப்போது, நம் தயவு தேவைப்படுவதால், காலை பிடிக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பின், நம் காலை வாரி விடுவார்' என, புலம்புகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement