Advertisement

குருபௌர்ணமி தினத்தில் 10,000 பேருடன் ஈஷாவில் 112-அடி ஆதியோகி முன்னிலையில் கொண்டாட்டம்

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகி திருமுகத்தின் முன்னிலையில் சத்குரு அவர்கள் சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சொற்பொழிவு ஆற்றிய சத்குரு அவர்கள் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் ஆழமான பதில்களை நகைச்ச்சுவையுடன் கலந்து வழங்கினார்.

அழிந்துவரும் மண்வளம் மற்றும் நீர்வளம் குறித்து பேசிய சத்குரு அவர்கள், அவற்றை பேணிக்காக்க நாம் ஒவ்வொருவரும் எழுந்துநிற்க வேண்டும் என்று கூறினார். நம் நதிகளை உயிர்ப்பூட்டுவதற்கு ஒரு விழிப்புணர்வு பயணத்தை தாமே மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார். குமரி முதல் தில்லி வரை நிகழும் இந்த பயணத்தின் போது, தாமே கார் ஒட்டிசென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்று கூறினார்.

சௌண்ட்ஸ் ஆப் ஈஷா என்ற இசைக்குழுவின் இசையை மனமகிழ்ந்து கேட்டதுடன் ஆனந்த நடனமும் ஆடினார். அதோடு "டமரு" என்ற புதிய இசைப்பேழையும் வெளியிடப்பட்டது.

சத்குரு பேசியது
தக்ஷிணாயத்திற்கு பிறகு முதல் பௌர்ணமியாக வரும் இந்நாளில் தான் ஆதி யோகியானான். சிவன் ஆதிகுருவாக மாறி, தென்திசை நோக்கி அமர்ந்து, சப்தரிஷிகளுக்கு ஞானம் வழங்கினார். இந்நாளே குரு பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது.

குரு பௌர்ணமி என்பது முதல் குரு உதித்த தினத்தை நமக்கு நினைவூட்டுகிறது. இது குருவைப் பற்றியதல்ல. இது தன்னிலை மாற்றம் பற்றியது. விருப்பத்துடன் இருந்தால், இயற்கையால் விதிக்கப்பட்டது என நாம் கருதும் எல்லைகள் அனைத்தையும் தகர்த்தெறிய முடியும் என்பதற்கான நினைவூட்டலிது.

தன்னிலை மாற்றத்திற்கு ஆதியோகி வழங்கிய 112 வழிகளைக் கொண்டாடும் இந்நாளில், 112 அடியில் சக்திவாய்ந்த ஆதியோகி இன்று நம்முடன் மீண்டும் இருப்பது மகத்துவமானது. இந்த உயிரோட்டமான யோக விஞ்ஞானம் அனைவரையும் சென்றடைவது அதிமுக்கியமானது.

இந்நாளில் இருந்து உத்தராயணம் வரை அடுத்த 6 மாதங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் சக்தி நிலையை மேம்படுத்த உகந்ததாய் இருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  திருநங்கைக்கு ஜடையப்போட்டு இவ்வளவு பெரிய சிலையை வைத்துவிட்டு நம்மக்கிடயே ஆதியோகி அதிசிவான்னு டாவு வுடரேயே வாத்தியாரே ஒன்னு தெரிச்சுக்கிரனும் நம்மளே பத்தி தெரிச்சவன் நம்பள நம்பமாட்டான் தெரியாதவன் தான் நம்புவான் நான் ஜாக்கி யாரு குரு யாரு சரி வேண்டாம் v

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  லக்ஷக்கணக்கான ஆண்டுகளாக ரிஷிகளும் முனிவர்களும் வேதங்களில் சொல்லப்படாத பெரிய அதிசயத்தை சொல்லுவதாக "போகஸ்" செய்து கொண்டு மக்களை மடயர்களாக்கி தனக்கு பெரிய பாதுகாப்பு மரியாதை தேடி கொள்வது லேட்டஸ்ட் பேஷன்.....இந்த 112 அடி இல்லாவிட்டால்......இவர் போதனை இல்லாவிட்டால். சிவம் அழிந்துவிடுமா. மறைந்துவிடுமா.... முதலில் தனது குடும்பத்தை சரி செய்ய முடியாதவர்.......மக்களுக்கு போதனை செய்ய வந்து விட்டார் என்று பரவலாக பேசுகின்றார்களே..... ஏதோ சினிமாக்காரன் பேரை சொல்லாமல் கடவுளின் பேரை சொல்லி பிசினஸ் செய்வதால் பிழைத்துப்போகட்டும் என்று பல அறிஞர்கள் விட்டு விட்டார்கள்.

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  இந்த தாத்தாவுக்கு வேற வேலையே கிடையாது.

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  இவர் கூறும் கருத்துக்களுக்கு வலுவான ஆதாரம் உண்டா?

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement