Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எந்த விதமான முன்னேற்றத்துக்கும் ஒப்புக் கொள்ள மாட்டோம்... எங்க மாநிலத்துக்குத் தேவையான, திராவிட இயக்கங்களாகிய நாங்க கேக்குற வசதியை மட்டும் செஞ்சு குடுக்கணும்...'ங்கற மனப்பான்மையுடன், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: மத்திய அரசு தரும் மறைமுகமான நெருக்கடிகளால், திராவிட இயக்கத்திற்கு சோதனையான கால கட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 'ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்' என, ஜெயலலிதா கூறிய போது, வாலை சுருட்டிக் கொண்டிருந்த மத்திய அரசு, இப்போது எப்படி ஒப்பந்தங்கள் போட்டது? ஜெ., எதிர்த்த பல்வேறு திட்டங்களையும், இப்போது மத்திய அரசு, தமிழகத்தின் மீது திணிக்கிறது.பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன் பேட்டி: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, பா.ம.க., நிபந்தனை விதிப்பது ஏற்புடையதில்லை. மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சட்ட வல்லுனர்கள் பரிந்துரையால், அதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
காங்., துணைத் தலைவர் ராகுல், 'டுவிட்டரில்' கருத்து பதிவு:
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதற்கு, மிக மோசமான மற்றும் ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு குறைபாடுகளே காரணம். இதற்கு, பிரதமர் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, இவ்வாறு மீண்டும் நடப்பதை அவர் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவை, பயங்கரவாத கோழைகள் எப்போதும் அச்சுறுத்த முடியாது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேச்சு: கற்பிக்கும் முறையை, 'டிஜிட்டல்' மயமாக்குவதன் மூலம், மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகளில் டிஜிட்டல் பலகைகள், புரொஜக்டர், புதிய மென்பொருள் ஆகியவற்றின் மூலம், பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக அரசால் தங்களுக்கு வேலை வழங்க முடியாது என்ற அவநம்பிக்கையில், .1.6 லட்சம் பேர், வேலை வாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். கடந்த, 10 ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகளை கொண்டு, ௯.௭௨ லட்சம் பேருக்கு, தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ௯,௦௦௦ பேருக்குக் கூட, வேலை கிடைக்கவில்லை. இது தான், திராவிட ஆட்சியாளர்களின் சாதனை.'நீங்க இப்படி சொல்றீங்க... தி.மு.க., ஸ்டாலினோ, நீங்க எல்லாருமே சேர்ந்து, நாடகம் ஆடுறீங்கங்குறாரு... எது உண்மை...' என, கேட்கத் தோன்றும் வகையில், பன்னீர்செல்வம் அணியில் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி பேட்டி:
சசிகலா சிறையில் இருந்தாலும், அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார், சசிகலாவின் பினாமி முதல்வரான பழனிசாமி. ஆட்சியை மேற்பார்வையிடும் பொறுப்பை, தினகரனிடம் கொடுத்திருக்கிறார் சசிகலா. அவர் குடும்பத்தினரோடு மோதல் என்பதெல்லாம், வெறும் நாடகம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement