Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மன நலன் காக்கும் பழமொழி
வயிற்றுப் புண், குடல் புண் ஏற்பட எத்தனை காரணங்கள் பட்டியலிடப்பட்டாலும் அவற்றில் கடைசியாக மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் ஆகியன இருக்கும். மன பிரச்னைகளுக்கும், உடல் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதைக் காட்ட மருத்துவ உலகில் 'குடல் புண்' ஐ சிறந்த உதாரணமாக கூறுவர். வேகமான உலகில் எண்ணங்களையும், கருத்துக்களையும் தக்க துணையிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு இப்பிரச்னை வருகிறது. இதனால் தான் மேல்நாடுகளில் 5 நாள் உழைப்பு 2 நாள் ஓய்வு என வாழ்க்கை முறையை அமைத்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
குடத்தை உருட்டும் ஆடி
ஆடிக்கு காவிரி மட்டுமல்ல. காவிரியின் துணை ஆறான குடமுருட்டியும் புகழ்பெற்றது. இது திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஓடுகிறது. இந்த ஆற்றின் பழைய பெயர் கடுவாய். குடமுருட்டியின் கரையில் 'கடுவாய்ப்புத்துார்' என்ற ஒரு ஊர் உள்ளது. திருவையாற்றில் பாயும் ஐந்து ஆறுகளுள் காவிரியும், குடமுருட்டியும் உள்ளன. திருஆலம்பொழில் என்ற ஊரின் புண்ணிய தீர்த்தமாகவும் குடமுருட்டி ஆறே உள்ளது. 'கடுவாய்' என்ற பெயரில் குடமுருட்டி ஆற்றை பற்றிய குறிப்புகள் தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement