Advertisement

அறிவியல் ஆயிரம்

பித்தப்பை கல்லை நீக்கும் அத்தர்

பித்தப்பையில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த அத்தர் உதவுகிறது. பித்தப்பை கல்லை நீக்குவதற்கு தரப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகள் அத்தரால் ஏற்படுவதில்லை. ரோஜாப்பூக்களில் இருந்து பெறப்படும் அத்தரின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றின் நீர்ம அளவை அதிகரிக்க ஆல்கஹால் கலக்கப்பட்டு வருகிறது. துாய அத்தருக்கே, மருத்துவக் குணம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரோஜாக்களில் பிங்க் நிறமுள்ள ரோஜாவுக்கே மருத்துவக் குணம் உள்ளது. சிவப்பு நிறமுள்ள ரோஜாக்களுக்கு மருத்துவ குணம் எதுவும் இல்லை.

தகவல் சுரங்கம்

முதல் பாரம்பரிய நகரம்




இந்தியாவிலேயே முதல்முறையாக ஆமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. குஜராத்தின் தலைநகராக 'காந்திநகர்' உருவாக்கப்படுவதற்கு முன்பு தலைநகராக ஆமதாபாத் தான் இருந்தது. இதன் ஆதிகாலப் பெயர் 'கருணாவதி'. இங்கு அதிகளவில் துணி ஆலைகள் உள்ளதால் 'துணி ஆலைகளின் நகரம்' என்பர். சபர்மதி நதிக்கரையில் உள்ளது. நதியின் குறுக்கே அதிக எண்ணிக்கையில் பாலங்களைக் கொண்டுள்ள இந்த நகரம் 'பாலங்களின் நகரம்' என்ற சிறப்பு பெயரையும் பெற்றுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement