Advertisement

இது உங்கள் இடம்

தமிழகத்தில் இனி பூஜ்யம் எடுக்கக் கூடாது!எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், 2016 ல் நடந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷனிடம், அரசியல் கட்சிகள் ஒப்படைத்த கணக்கின்படி, ௧௭௬ கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் நிதியாக, தொண்டர்களிடம் இருந்து, 9.70 கோடி வசூலித்த, தி.மு.க., 97.34 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 4.10 கோடி ரூபாய் வசூலித்த, அ.தி.மு.க., 64.72 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.மொத்தம், 8.27 கோடி ரூபாய் வசூலித்த, பா.ம.க., 3.02 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 13.97 கோடி ரூபாய் வசூலித்த காங்கிரஸ், 512 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 1.71 கோடி ரூபாய் வசூலித்த, பா.ஜ., 3.49 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
மொத்தம், 97.34 கோடி ரூபாய் செலவழித்த, தி.மு.க.,வால், 89 எம்.எல்.ஏ.,க்களை மட்டும் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக ஆக முடிந்தது. ௬௪.௭௨ கோடி ரூபாய் செலவழித்த, அ.தி.மு.க.,விற்கு, 134 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக, மெஜாரிட்டியுடன் ஆட்சியும் அமைத்தது.மொத்தம், 5.12 கோடி ரூபாய் செலவு செய்த காங்கிரசுக்கு, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். மற்ற கட்சிகள் எல்லாம் தோற்று போயின. 3.49 கோடி ரூபாய் செலவு செய்த, பா.ஜ.,விற்கு ஒரு, எம்.எல்.ஏ., கூட கிடைக்கவில்லை.பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஊராட்சி, ஒன்றிய அளவில் தொண்டர்கள் பலம் கிடையாது. மாநில நிர்வாகிகளுக்கு, தொகுதி வாரியாக உள்ள நகரங்கள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் தெரியாது. எல்லா ஊராட்சிகளிலும் கட்சி கொடி ஏற்ற, ஒரு தீவிர உறுப்பினர் கூட கிடையாது.
கட்சி மேலிடம் தந்த தேர்தல் நிதியை, தேசிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு செலவு செய்யாமல், 'அமுக்கி' விட்டனர். தி.மு.க.,வின் அல்லக்கையாக, காங்கிரஸ் பிரமுகர்கள் திரிந்தனர். தேர்தல் வேலை தெரியாத, பா.ஜ., நிர்வாகிகளும், நிதியை சரிவர தொண்டர்களிடம் போய் சேர்க்கவில்லை.இனி வரும் தேர்தல்களில், பா.ஜ., தலைவர் அமித் ஷா, கறாராக செயல்பட்டால் மட்டுமே, தமிழகத்தில் தொண்டன் வரை கட்சி காசு போய் சேரும். இனி நடக்கும் தேர்தல் முடிவு பட்டியலில், பூஜ்யம் வராமல் இருக்க, இப்போதிலிருந்து, தொண்டர்களை குஷிப்படுத்துவது அவசியம்!


மாற்று வழிகளையோசித்தால்யாவரும் நலம்!


வி.எஸ்.ராமு, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், ஏழை, எளிய மாணவர்கள், 1.௨௬ லட்சம் பேரை, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கிறது, தமிழக அரசு; அதற்கான, கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, அரசே கட்டி விடுகிறது.இதற்காக, ஆண்டுக்கு பல நுாறு கோடி ரூபாயை, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு, அரசு வழங்குகிறது; இது, எத்தனை பேருக்குத் தெரியும்!இப்பள்ளிகளில், அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. கல்விக்காக அரசு கோடி கோடியாக செலவிடுகிறது.அதை உருப்படியாக செலவழித்தால், கல்வி தரமும் மேம்படும். மது, மணல் விற்று தான், அரசின் கல்லா நிறைய வேண்டுமா... கட்டண பள்ளிகளை, அரசே கட்டி துவக்குவதன் மூலம், ஆண்டுக்கு பல நுாறு கோடிகளை அள்ளலாம்.
முதற்கட்டமாக, ஒரு ஒன்றியத்திற்கு, ஒரு கட்டண பள்ளி வீதம், 5 - 10 ஏக்கர் பரப்பளவில், கிராமப் பகுதிகளில் துவக்க வேண்டும்.அடுக்குமாடி அமைப்பில், பள்ளிகள் உருவாக வேண்டும். அங்கு, ஆய்வகம், மைதானம், கணினி பயிற்சி, விளையாட்டு பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்பு என, சகல வசதிகளும் செய்து தர வேண்டும்.இளம் வயது ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன் உள்ளிட்ட பிற நாட்டு மொழியும், கற்று தர வேண்டும். பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும்.இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில், முதல்வர், துணை முதல்வர், நிர்வாக அதிகாரி, அலுவலக பணியாளர்கள் மட்டுமே, முழு நேர அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும்.
பிற ஆசிரியர்கள் அனைவருக்கும், நியாயமான தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.இப்படி செய்து பாருங்கள்... மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இப்பள்ளிகளில் சேர குவிந்து விடுவர். பணமும் கோடி கோடியாய் கொட்டும்.படிப்படியாக, அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து விடலாம்; இதைத் தான் பெற்றோர் விரும்புகின்றனர்!தவிர்க்கவும்புறக்கணிக்கவும்முடியாது!


தி.இரா.திருவேங்கடம், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'போக்குவரத்தில், அரசும், தனியாரும் இரு கண்கள் போல் தேவை' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.அதில், அரசு பஸ்கள் அரசுடைமையாக்கப்பட்டதே தவறு என்ற கோணத்தில், அவர் சுட்டிக்காட்டி இருந்தார்; அது ஏற்கத்தக்க கருத்தல்ல!மதுரையில், டி.வி.எஸ்., நிறுவனம் பஸ் போக்குவரத்தை நடத்திய போது, மதுரை மக்கள் சந்தோஷப்பட்டனர் என, வாசகர் குறிப்பிட்டு உள்ளார்.
அப்படியானால், போக்குவரத்து துறை அரசுடைமை ஆக்கப்பட்ட பின், மதுரை மக்கள் யாருமே பஸ்சில் பயணிப்பது இல்லையா அல்லது ஒட்டுமொத்தமாக அரசு பஸ்சை ஒதுக்கி தான் விட்டனரா...தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஒரு கோடி பேருக்கு, அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் மட்டுமே இயங்கினால், இவர்களால் இலவசமாக பயணிக்க முடியுமா...முதியோருக்கு இலவச பஸ் பாஸ் தரப்படுகிறது. அது மட்டுமல்ல, அரசு பஸ்களில் பொதுமக்களுக்கும், கட்டண சலுகையில், பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாநகர பேருந்துகளில் மாதந்தோறும் பயணிப்போருக்கு, கட்டண சலுகையில் பாஸ் வழங்கப்படுகிறது.சென்னை போன்ற பெருநகரங்களில், மாதந்தோறும், ௧,௦௦௦ ரூபாய் செலுத்தி பஸ் பாஸ் வாங்கினால், குளிர்சாதன பஸ்களை தவிர, எந்த மாநகர பஸ்சிலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம்.இந்த சலுகைகள் எல்லாம் கொடுத்து, தனியார் பஸ் நிறுவனங்களால் ஓட்ட முடியுமா...சேவை மனப்பான்மை என்ற நோக்கில், அரசு பஸ்கள் செவ்வனே இயங்குகின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசு பஸ்களுடன், தனியார் பங்களிப்பும் தேவை.
எனவே, அரசு பஸ்களை முற்றிலும் புறக்கணிக்கவும் முடியாது; தனியார் பஸ்களின் பங்களிப்பையும் தவிர்க்க முடியாது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement