Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்: 'காங்கிரசால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை' என, அக்கட்சி, எம்.பி., அன்வர்ராஜா கூறுகிறார். காங்கிரசால் தான், எம்.ஜி.ஆர்., - ஜானகி, ஜெ., என அனைவரும் முதல்வராயினர். காங்., துாக்கி விடாவிட்டால், அ.தி.மு.க., இல்லாமல் போய் இருக்கும்.


டவுட் தனபாலு: தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்க, தி.மு.க.,ன்னு ஒரு கட்சி இல்லைன்னா, இன்னைக்கு காங்கிரசே இருக்காதுன்னு ஒத்துக்குறீங்களா... எம்.ஜி.ஆர்., துவங்கி, ஜெ., வரை சொன்ன நீங்க, கருணாநிதியை குறிப்பிடலையே... அதனால தான், இந்த, 'டவுட்!'



முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்:
ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என, கோரி வருகிறோம். அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள், அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை.



டவுட் தனபாலு: நீங்களும் அவரால் தானே, சட்டசபைக்கு தேர்வாகி இருக்கீங்க... இதைப்பத்தி, ஸ்டாலின் பலமுறை சபையில் கேள்வி எழுப்பி முயற்சி செய்து இருக்காரு... நீங்களும், உங்க அணியைச் சேர்ந்த உறுப்பினர்களும், இதைப் பத்தி மூச்சுவிட்டது உண்டா... சட்டசபையில் அமர்ந்து இருக்கும்போது, ஜெ., குறித்த சிந்தனை உங்களுக்கும் வராதோ என்பது தான், மக்களின், 'டவுட்!'


தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்:
மத்திய அரசு, 10 மாநிலங்களுக்கு வறட்சி நிவாரண நிதி ஒதுக்கியது. அதில் தமிழகத்துக்கு, 1,278 கோடி ரூபாய் என்ற அதிக நிதியை ஒதுக்கியது; கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தப்படும்.


டவுட் தனபாலு: மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக, 39 ஆயிரத்து, 565 கோடி ரூபாய் கேட்டீங்க... 1,278 கோடி ரூபாய் தந்தாங்க... இதையே பெருசா நினைத்து புகழ்வதைப் பார்த்தால், வறட்சி பாதிப்பை பன்மடங்கு அதிகமா காட்டினீங்களோ என்ற, 'டவுட்' தான் ஏற்படுது... அப்புறம் எப்படி, கூடுதல் நிதி வரும்?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement