Advertisement

அக்கம் பக்கம்

ராஜ தந்திரி!


பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை பார்த்து, கிறுகிறுத்து போயிருக்கின்றனர், அவரது கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள்.நிதிஷ் குமார், பா.ஜ.,வையும், பிரதமர் நரேந்திர மோடியையும், கடுமையாக எதிர்த்ததன் காரணமாகத் தான், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், அவருடன் கூட்டணி அமைத்தார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
நிதிஷ் குமாரின் ஆவேசத்தை பார்த்து, ஆச்சரியப்பட்ட, காங்., தலைவர் சோனியா, 'நம் கட்சியினர் கூட, மோடியை இந்த அளவுக்கு விமர்சித்தது இல்லையே...' என, மகிழ்ச்சி அடைந்து, காங்கிரசையும், நிதிஷ் கூட்டணியில் இணைத்தார்.நிதிஷ் - லாலு - சோனியா கூட்டணி, பீஹார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது; நிதிஷ் குமார், முதல்வராக பதவியேற்றார்.ஆனால், சமீபகாலமாக, நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம் தென்படுகிறது. பா.ஜ.,வுடனும், மோடியுடனும் நெருக்கம் காட்டி வருகிறார்.ஜனாதிபதி தேர்தலிலும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், காங்., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி சார்பில்
நிறுத்தப்பட்ட மீரா குமாரை, புறக்கணித்து விட்டார்.இதனால், மண்டை காய்ந்து போன, லாலுவும், சோனியாவும், 'இவர் நல்லவரா; கெட்டவரா... இவரை நம்பலாமா; நம்பக் கூடாதா...' என, குழப்பத்துடனேயே வலம் வருகின்றனர்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, 'எங்க ஆளு, அரசியலில் ராஜ தந்திரி என்பதை நிரூபித்து விட்டார்' என, பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement