Advertisement

அறிவியல் ஆயிரம்

நோயை முறியடிக்கும் உணவுகள்


நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தண்ணீர், பருவகால மாறுதல், உணவு மாறுதல் சார்ந்த பிரச்னைகள் விரைவில் ஏற்படுகின்றன. நோயை
முறியடிக்கும் ஆன்ட்டிபயாடிக்குகளை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு பரவி வருகிறது. இவை உடலுக்கு நன்மை செய்யும் லாக்டோ பாக்டீரியாக்களை பெருங்குடலில் அழித்துவிடுகின்றன. உணவின் மூலமாக நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கலாம்.
முட்டைக்கோஸ், பூண்டு, காலிபிளவர், டர்னிப், பிராக்கோலி, கடல் பாசி, ஆழ்கடல் மீன், சல்மான் மற்றும் டூனா மீன்வகைகள், பாதாம் பருப்பு ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்.

தகவல் சுரங்கம்



நியமன உறுப்பினர்கள்

லோக்சபாவுக்கு நியமன உறுப்பினர்களாகஆங்கிலோ இந்தியன் பிரிவை சேர்ந்த இருவர்
நியமிக்கப்படுவது வழக்கம். ராஜ்யசபாவுக்கு நியமன உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். குறிப்பாக கலை, இலக்கியம், சேவை, விளையாட்டு போன்றவற்றில் சாதனைகள் புரிந்த இந்திய குடிமகனாக உள்ளவர்கள், நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தமிழக சட்டசபைக்கு கவர்னரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர் ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுவார். இவர் சபையின் வாதங்களிலோ, வாக்களிப்புகளிலோ பங்குபெற முடியாது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement