Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேட்டி: வேளாண்மை தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம். வேளாண் தொழில் நலிவடையாமல் பாதுகாப்பதில், அரசுக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. படித்த இளைஞர்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்பி, வேளாண்மையை ஆதார தொழிலாக செய்ய வேண்டும். வேளாண்மை தொழிலை லாபகரமாக நடத்த முடியும்.லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு:
எம்.ஜி.ஆர்., தன் வீட்டிலேயே, தாய்க்கு கோவில் அமைத்து வழிபட்டார். ஜெ., தன் தாய் மீது, அளவில்லா பாசம் வைத்திருந்தார். ஆனால் இன்று, தமிழக இளைஞர்கள் மத்தியில், தாய், தந்தை மீதான பாசம் குறைந்து விட்டது. ஹாஸ்டலில் தங்கி படிப்பதாலும், வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதாலும், பெற்றோர் மீது இளைஞர்களுக்கு, பாசம் இருப்பதில்லை. எம்.ஜி.ஆர்., - -ஜெ., பின்பற்றியது போல், இன்றைய இளைஞர்களும், பெற்றோரை தெய்வமாக நினைக்க வேண்டும்.


தமிழக, காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி:
'காங்கிரசால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை' என, அ.தி.மு.க., - எம்.பி., அன்வர் ராஜா கூறுகிறார். காங்கிரசால் தான், எம்.ஜி.ஆர்., - ஜானகி, ஜெயலலிதா என, அனைவரும் முதல்வராயினர் என்பதை மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் துாக்கி விடாவிட்டால், அ.தி.மு.க., இல்லாமல் போய் இருக்கும்.


த.மா.கா., கட்சி தலைவர் வாசன் அறிக்கை:
பயங்கரவாத இயக்கத்தால், தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகாமல் இருந்தது. ஆனால், இப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக, சென்னையைச் சேர்ந்த மேலும் மூவர் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. இது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இதை, மிக முக்கியப் பிரச்னையாகக் கொண்டு, பயங்கரவாத இயக்கத்தை ஆரம்ப கட்டத்திலேயே, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேட்டி:
தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை பார்லிமென்டில், அந்த அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது; அதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இது தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், நிச்சயமாக நான் பேசுவேன். பழனிசாமி அணியிடம், தார்மீக அடிப்படையில் எதையும் எதிர்பார்க்க முடியாது. சட்டப்படி தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.


'இலவசங்கள்னால தமிழகம் குட்டிச்சுவரா இருக்குன்னு, மத்த மாநில மக்கள் பேசிக்கிறாங்க... அந்த திட்டம் உங்களது தானா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் இன்று நடப்பது, அ.தி.மு.க., ஆட்சியாக இருக்கலாம்; தி.மு.க., வலிமையான எதிர்க்கட்சியாக இருக்கலாம்; ஆனால், தமிழக அரசியல், எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வது, பா.ம.க., தான். பா.ம.க., ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், பா.ம.க.,வின் யோசனைகள் தான், திட்டங்களாகவும், சட்டங்களாகவும் மாறுகின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • skv - Bangalore,இந்தியா

    மண்ணாங்கட்டி நம்ம தமிழகத்தின் காசெல்லாம் சசி அண்ட் கூட்டம் இதர எல்லா மந்திரிகள் இந்நாள் அண்ட் முன்னாள் குடோன் லேதான் இருக்குங்க எல்லோரும் 6 தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டு ஜாலியா இருக்கானுக மக்களை போதையே மூழ்கடிச்சு கொன்னாச்சு இன்னம் புதுசா டாஸ்மாக் ஓபன் பண்ரான்னுக பரதேசிங்க

  • skv - Bangalore,இந்தியா

    நேருக்காலத்துலேந்து இதையேதான் சொல்லிண்டு 77 வருஷமா இதே ராமாயணமே தான் குர்ரான் தான் பைபிளே தான் தான் ஓதிண்டு இருக்காங்க அரசியல் வியாதிகளான எல்லா பார்ட்டிக்காரனுகளும் எல்லாம் தன் சொத்து சுகமே சேர்த்துண்டுட்டான் இப்போ பெரிய பொய்களே சொல்லிண்டு நாட்டை ஏமாத்திண்டுருக்கானுக

  • skv - Bangalore,இந்தியா

    மத்தவா என்ன சொல்றது நமக்கே தெரியுமே தமிழ்நாட்டின் எகானமி எங்கே போயிட்டுது என்று மந்திரிகள் அவா பினாமிக MLAkkal mp க்கள் கௌன்சிலருங்கோ எல்லாம் கோடியே இல்லே இருக்கானுக்கோ மக்கள் என்று நன்னாயிருக்கோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement