Advertisement

அக்கம் பக்கம்

சட்டி சுட்டதடா!


'நரேந்திர மோடி பிரதமரானதுமே, எனக்கு ஏதாவது தொல்லை கொடுப்பார் என நினைத்தேன்; ஆனால், என் அரசியல் வாழ்வுக்கே, ஒட்டு மொத்தமாக, 'ஆப்பு' அடிப்பார் என, கனவில் கூட நினைக்கவில்லை' என, கண்ணீர் வடிக்கிறார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ்.முந்தைய, காங்., தலைமையிலான மத்திய அரசில், லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் நடந்த முறைகேடுகளை எல்லாம், இப்போது தோண்டி எடுத்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, தற்போதைய, பா.ஜ., தலைமையிலான, மத்திய அரசு.லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி, தேஜ்பிரதாப் என, ஒட்டு மொத்த குடும்பமும், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் வந்து விட்டது.சி.பி.ஐ., சோதனைக்குப் பின், சிறிது, 'பிரேக்' கிடைக்கும் என, நினைத்திருந்தார், லாலு. ஆனால், அடுத்த அதிரடியாக, லாலுவின் மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்திக்கு எதிராக, அமலாக்க துறையும் களத்தில் இறங்கியுள்ளது.
போலி நிறுவனங்களை துவக்கி, நிதி முறைகேடு செய்ததாக, மிசா பார்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாலு, 'அவ்வளவு தான், நம் அரசியல் அஸ்திவாரத்தின் கடைசி செங்கல்லையும் பெயர்த்து எடுத்து விட்டனர்; ஆட்டம் குளோஸ்' என, விரக்தியுடன் கூறி வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement