Advertisement

'டவுட்' தனபாலு

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்: அரசியல் களத்தில் எனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், பீஹாரில் மெகா கூட்டணியை உடைக்கும் எண்ணத்திலும், சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது. என் மீது தவறு இருந்தால், துாக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்.

டவுட் தனபாலு: 'தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் இருக்கீங்க... இதுதான், அரசியல் களத்தில் நீங்க பெற்ற நற்பெயரா... சிறை தண்டனையை அனுபவிக்காமல், ஜாமினில் வெளியே வந்த நீங்க, சொல்றது எல்லாம் நடக்குற காரியமா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

காங்., மூத்த தலைவர் கபில் சிபல்: எதிர்க்கட்சிகளின் அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரை மட்டுமே குறி வைத்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் சோதனைகள் நடத்தி வருகின்றன.

டவுட் தனபாலு: உங்க கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டில், 'ரெய்டு' நடந்ததும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையின் செயல்பாட்டின் மீது உள்நோக்கம் கற்பிக்குறீங்க... ஆம் ஆத்மி மற்றும் அ.தி.மு.க.,வினரும் இதற்கு ஆளானாங்களே... அப்போ எங்கே போச்சு உங்க அறச்சீற்றம்கற, 'டவுட்'டுக்கு என்ன விளக்கம் வச்சிருக்கீங்க...!

தமிழக, காங்., மேலிட தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத்: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில், மோடியின், 'ரப்பர் ஸ்டாம்ப்' வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

டவுட் தனபாலு: மத்தியில் ஆளும் அரசு, ஜனாதிபதி தேர்தலில் எப்படிப்பட்ட நபரை முன்னிறுத்தும், எப்படிப்பட்ட கவர்னரை நியமிக்கும்கறதை தான், காலங்காலமா பார்த்து வர்றோமே... அப்புறம் என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி, குதிக்கிறீங்க... 'பிரதமரையே ரப்பர் ஸ்டாம்பாக வைத்திருந்தவர்கள், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசலாமா'ன்னு, பதிலுக்கு அவங்க, 'டவுட்' கிளப்பினால், யாருக்குங்க சங்கடம்...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

    நீங்க நியமித்த பிரதிபா பாட்டீல் மாதிரி ஆளா ராம்நாத் இருக்க மாட்டாங்கன்னு நினைக்குறீங்களோ என்பது தான் என்னோட டவுட்.

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    உண்மையாகவே ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங்க் மிகவும் பொருத்தமாக இருந்திருப்பார் நம்ம கலாம் வந்து சோனியாவுக்கு ஆப்பு வைத்து கெடுத்து விட்டார் பத்து வருட ஆட்சியில் பெயரை கெடுத்துக்கொண்டதால், அவரை இனிமேல் எந்த பதவிக்கும் பரிந்துரை செய்யமுடியாது. குற்றங்கள் நிரூபிக்க பட்டால், ஜெயில் சிஙகு தான்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    என்க ஊரிலேயும் ஒருத்தர் 'தூக்கிலே தொங்கும் ' சபதம் செய்திருக்கிறார் ஆ ஊன்னா 'தூங்கறேன்' என்று கிளம்புகிறீர்களே தூக்கு கயிறு உற்பத்தி ஆரம்பித்தால் சக்கை போடு போடும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement