Advertisement

அக்கம் பக்கம்

பங்களா ராசி!

'நல்ல ஜோதிடராக பார்த்து, நமக்கு நேரம் நன்றாக இருக்கிறதா என, கேட்க வேண்டும்' என, புலம்பி வருகிறார், மத்திய கலாசார துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மா.
மத்திய அமைச்சர்களுக்கெல்லாம், டில்லியில், அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். இவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வசித்த, ராஜாஜி மார்க் பங்களா ஒதுக்கப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவதால், அவர், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறி விடுவார். அவருக்கு, டில்லியில் வேறு பங்களா ஒதுக்கப்பட வேண்டும்.
இதனால், தீவிரமாக ஆலோசனை நடத்திய அதிகாரிகளுக்கு, மகேஷ் சர்மாவின் பங்களா தான் ஞாபம் வந்தது. 'நீங்கள் வசிக்கும் பங்களாவை, பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்க வேண்டும்; உங்களுக்கு, அக்பர் ரோட்டில் உள்ள பங்களாவை தருகிறோம்; அங்கு செல்லுங்கள்' என, அவரிடம்,
அதிகாரிகள் கூறினர்.
மகேஷ் சர்மாவும், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், அக்பர் ரோட்டில் உள்ள பங்களாவுக்கு சென்று விட்டார். ஆனால், சில மாதங்களிலேயே, மீண்டும் மகேஷ் சர்மா வீட்டுக்கு வந்த அதிகாரிகள், 'தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்துக்கு, இந்த பங்களா தேவைப்படுகிறது; உங்களுக்கு வேறு பங்களா ஒதுக்குகிறோம்' என்றனர்.
கடுப்பான மகேஷ் சர்மா, 'அதென்னவோ தெரியவில்லை; இத்தனை அமைச்சர்கள் இருக்கும் போது, அதிகாரிகளுக்கு, நான் வசிக்கும் பங்களா தான், கண்களுக்கு தெரிகிறது' என, புலம்பி வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement