Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
அத்தி மரமும் ஆன்மிகமும் உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் பக்தர்கள், அத்தி மரத்தை பார்ப்பது அபசகுனமாக கருதப்படுகிறது. எனவே உ.பி., அரசு, யாத்திரை செல்லும் பாதையில் உள்ள அத்தி மரங்களை வெட்ட சொல்லியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தி மரப் பலகையில் அமர்ந்து தியானம் செய்தால் புவிஈர்ப்பு விசை நம்மை தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி அத்தி மரத்தை குறித்து உள்ளது. அதாவது அத்தி மரம் காய்ப்பது தெரியும். பூப்பதை பார்க்க முடியாது. அத்தி பூத்தாற்போல என்ற வழக்கு தமிழ் மொழியில் உள்ளது.
தகவல் சுரங்கம்
மக்கள் தொகை மாறாத நகரம்
உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ல், மக்கள்தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை மாறாத நகராக குல்மார்க் உள்ளது. இங்கு மக்கள் தொகையில் 99% ஆண்கள் 1% பெண்கள். கடுமையான பனிப்பொழிவின் காரணமாய் பெரும்பாலானோர் இரவில் வெளியேறிவிடுவர். சுற்றுலாப்பயணிகளும் அதைச் சார்ந்த தொழில் செய்பவர்களுமே இரவில் தங்குவதுண்டு. இங்கு 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் எவரும் இல்லை. ஸ்ரீநகரே மலைவாசஸ்தலம் என்றாலும் காஷ்மீர் மக்கள் கோடைவாசஸ்தலமான குல்மார்க்கிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement