Advertisement

அறிவியல் ஆயிரம்

வளமாகும் கழிவுகள்

வவ்வால்கள் பழங்களை உண்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற பெரிதும் துணை செய்கின்றன. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வண்டு, பூரான், தேள், பல்லி, எலி போன்றவற்றை பூச்சி தின்னி வவ்வால்கள் உணவாக உட்கொள்கின்றன. வவ்வால்கள் தன் வாய் வழியாக உண்ட உணவு செறித்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகின்றன. வவ்வாலின்
கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது. இதில் அதிகளவு புரதச் சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாக பயன்படுகிறது. இவை அதிகளவு லாபத்திற்கு விற்கப்படுகின்றன.


தகவல் சுரங்கம்


குற்றாலத்தில் குளிக்காத காந்தி

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக சுற்றுப்
பயணம் செய்த காந்தி 1934ல், தமிழகம் வந்தார். குற்றாலத்தில் குளிக்க வந்த காந்தியடிகள், அங்குத் தாழ்த்தப்பட்டவர்கள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து திரும்பிச் சென்றது ஓர் உண்மைச் சம்பவம். அதன்
அடிப்படையில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான நாவல், கொடி காட்ட வந்தவன். ரேவதி என்ற புனைபெயரில் ஈ.எஸ்.ஹரிஹரன் என்ற எழுத்தாளர் இந்த நாவலை
எழுதியுள்ளார். தான் பிறந்த நட்சத்திரமான ரேவதியை புனைப்பெயராக சூட்டிக்கொண்ட எழுத்தாளர் இவர். தமிழ்நாடு காந்தி நினைவு நிதி இதனை வெளியிட்டுள்ளது. இந்த நாவல் 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement