Advertisement

அக்கம் பக்கம்

ஜோதிடமே சரணம்!



நம் நாட்டில், இப்போது, மக்களை நம்புவதை விட, ஜோதிடர்கள் மற்றும் வாஸ்து நிபுணர்களைத் தான், அரசியல்வாதிகள் அதிகமாக நம்புகின்றனர்.
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு தான், வாஸ்து விவகாரங்களுக்கு, அதிகமாக அடிமையானவர். தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவும், இவருக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை.இந்த வரிசையில், லேட்டஸ்ட்டாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் இணைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ராம்நாத் கோவிந்தை, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தது, வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தது என, அனைத்து விஷயங்களையுமே, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தான், அமித் ஷா மேற்கொண்டார்.இதற்காக, தன் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள, தனக்கு மிகவும் நெருக்கமான மூன்று ஜோதிடர்களின் உதவியை நாடினார், அமித் ஷா. அவர்கள் என்னென்ன ஆலோசனைகளை தெரிவித்தனரோ, அதன்படியே, ராம்நாத் கோவிந்தை, அமித் ஷா ஆட்டுவித்ததாக, பா.ஜ.,வினரே கூறுகின்றனர்.இதுமட்டுமல்லாமல், தன்னை சந்திப்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்களிடம், 'பிரபலமான ஜோதிடர்கள், உங்கள் மாநிலத்தில் உள்ளனரா...' என, ஆர்வத்துடன் கேட்க துவங்கியுள்ளார்.அமித் ஷாவின் இந்த நடவடிக்கைகளை பார்த்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மிரண்டு போயுள்ளனர்.


கோட்டை தகர்க்கப்படுமா?


வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., கால் பதிக்க முடியாது என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ஏற்கனவே கூறி வந்தனர். மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைத்த பின், வட கிழக்கு மாநிலங்களுக்கு குறிவைத்தது.இதன் விளைவாக, அசாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் ஆகிய வட கிழக்கு மாநிலங்கள், பா.ஜ., வசம் வந்தன. அடுத்தபடியாக, பா.ஜ., தலைவர்களின் பார்வை, கம்யூனிஸ்ட் கட்சியினரின் இரும்பு கோட்டையாக கருதப்படும், குட்டி மாநிலமான திரிபுராவின் பக்கம் திரும்பியுள்ளது.இந்த மாநிலத்தில், பெரும்பாலும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கட்சிகளே, மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான, மாணிக் சர்க்கார், 1988லிருந்து, இந்த மாநிலத்தின் முதல்வராக பதவி வகிக்கிறார்.எளிமையானவர், ஆடம்பரமில்லாதவர், சாதாரண மக்களுடன் நெருங்கி பழகுபவர், ஊழல் இல்லாதவர் ஆகிய, 'இமேஜ்' காரணமாக, அங்கு, மக்கள் செல்வாக்குடன் வலம் வருகிறார், மாணிக் சர்க்கார்.திரிபுரா மாநிலத்துக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 'மாணிக் சர்க்காரை வீழ்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையை தகர்க்க வேண்டும்' என்ற நோக்கத்துடன், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, களம் இறங்கி
உள்ளார்.கடந்த சில மாதங்களிலேயே, மூன்று முறை, திரிபுராவுக்கு சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தியுள்ளார். அமித் ஷாவின் பாய்ச்சலை பார்த்து, எதற்குமே கலங்காத மாணிக் சர்க்கார், மிரண்டு போயிருக்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement