Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
பழமையும் புதுமையும்
தேங்காய்ப் பாலில் இருந்து நேரடியாகவே எண்ணெய்யைப் பிரித்தெடுத்தால், அதற்கு 'வர்ஜின்' தேங்காய் எண்ணெய் என்று பெயர். நன்கு முற்றிய தேங்காயில் இருந்து கிடைக்கும் பாலை சுத்தப்படுத்திய பின், மையம் விட்டோடும் சென்ட்ரிபூசல் என்ற முறையில் 'வர்ஜின்' தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள ஈத்தாமொழி என்ற ஊர், நெட்டை தென்னைக்குப் பெயர் பெற்றது. இங்கு விவசாயிகள் 'உருக்கெண்ணெய்' என்ற பெயரில், பாரம்பரிய முறையில் 'வர்ஜின்' தேங்காய் எண்ணெய்யை தயாரிக்கின்றனர். இது தொழில்நுட்ப அடிப்படையில், 'வர்ஜின்' தேங்காய் எண்ணெய் என தயாரிக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
டில்லிக்கு வெளியே ஜனாதிபதி மாளிகை
டில்லியில் ராஷ்டிரபதி பவன், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையாகும். மாநிலங்களின் தலைநகரங்களுக்கு ஜனாதிபதி செல்லும் போது, கவர்னர் மாளிகையில் தான் தங்குவார். டில்லிக்கு வெளியே சிம்லாவிலும், ஐதராபாத்திலும் ஜனாதிபதி தங்குவதற்கென அதிகாரப்பூர்வ மாளிகைகள் உள்ளன. சிம்லாவில் உள்ள ஜனாதிபதி தங்கும் மாளிகை, முதலில் வைஸ்ராய் தங்கும் இல்லமாக இருந்தது. 1850ல் கட்டப்பட்டு, 1895ல் அரசு இல்லமானது. நாட்டின் கோடைகாலத் தலைநகரமாக சிம்லா இருந்ததால் இந்மாளிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை இங்கு தங்குவதை, ஜனாதிபதிகள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement