Advertisement

அக்கம் பக்கம்

அடுத்தது யார்?


'இந்த அம்மாவுக்கே, இந்த நிலைமை என்றால், நமக்கெல்லாம் என்ன நடக்குமோ' என, மம்தாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஆடிப் போயிருக்கின்றனர், காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள்.'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம்' என கூறி வரும், பா.ஜ., தலைவர்களின் அடுத்த இலக்கு, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா.டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதல்வரும், காங்., மூத்த தலைவருமான நாராயணசாமி ஆகியோருக்கு, அந்தந்த மாநில கவர்னர்கள் மூலம், கடும் நெருக்கடி கொடுத்த, பா.ஜ., மேலிடம், இப்போது, மம்தாவுக்கு எதிராகவும், அதே அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநில கவர்னர், திரிபாதியின் அதிரடி நடவடிக்கைகளால், அரண்டு போயிருக்கிறார், மம்தா. 'எதற்குமே கலங்காதவர்; தைரியமானவர்; எதிரிகளை துாள் துாளாக்குபவர்' என, திரிணமுல் கட்சியினர், தங்கள் தலைவிக்கு கொடுத்த, 'பில்டப்'கள் எல்லாம், திரிபாதியின் செயல்பாடுகளால், சுக்கு நுாறாகி விட்டன.'கவர்னர் திரிபாதி, என்னை மிரட்டுகிறார். எனக்கு பயமாக இருக்கிறது' என, மம்தாவையே, வாய் விட்டு புலம்ப வைக்கும் அளவுக்கு, அதிரடி காட்டி வருகிறார், திரிபாதி.இதனால், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடக்கும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள், 'நம்ம தலைக்கு மேல், எப்போது கத்தியை தொங்க விடப் போகின்றனரோ தெரியவில்லையே' என, கதறத் துவங்கியுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement