Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார்: கறந்த பால் மடி புகாது; கருவாடு மீனாகாது; தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது.
டவுட் தனபாலு: இதே மாதிரித்தான், ஜெ., சவால் விட்டாரு... கடைசியில், தமிழக சட்டசபை வரலாற்றில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சியா, தி.மு.க., வந்திடுச்சு... அடுத்த கட்சிக்கு ஆரூடம் சொல்றீங்க... கறந்த பால் மடி புகாதுங்கற இந்தத் தத்துவம், உங்களை விட்டுப் பிரிந்த பன்னீர் அணிக்கும் பொருந்துமா என்ற, 'டவுட்'டை கொஞ்சம் விளக்குங்களேன்...!
ஜெ., அண்ணன் மகள் தீபா: உண்மையான அ.தி.மு.க., நாங்கள் தான். 1.50 கோடி தொண்டர்களின் ஆதரவும், எனக்குத் தான் உள்ளது.
டவுட் தனபாலு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில், அப்பப்ப தலைகாட்டினீங்க... அப்புறமா, ஆளையே காணோம்... 1.50 கோடி தொண்டர்களின் கருத்துகளை எப்ப கேட்டீங்க... எப்படிக் கேட்டீங்க... கட்சிக்கு சொந்தம் கொண்டாடி, தேர்தல் கமிஷனிடம் எத்தனை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருக்கீங்க... தினகரன், பன்னீர் தரப்பு எவ்வளவு தாக்கல் செய்திருக்கு என்பது எல்லாம், நாட்டு மக்களுக்கு, 'டவுட்'டே இல்லாம தெரியுமே...!
அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன்: அ.தி.மு.க.,வைப் பொருத்தவரை, தற்போதைய முதல்வர் பழனிசாமியே நீடிக்க வேண்டும். கட்சிப் பணியை தினகரன் கவனிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
டவுட் தனபாலு: கட்சிக்கு ஒருத்தர்; ஆட்சிக்கு ஒருத்தர்னு இருக்கக் கூடாதுன்னு உங்களைப் போன்ற ஒரு சிலர் ஆரம்பித்து வைத்த கோஷம் தான், இன்னைக்கு, அ.தி.மு.க., இத்தனை கோஷ்டியா பிரியக் காரணம்... ஆமா, கட்சித் தலைமை சொற்படித்தான் ஆட்சி நடத்தணும்னு அடுத்ததா எந்த நிபந்தனையும் விதிப்பீங்களா என்ற, 'டவுட்'டையும் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement