Advertisement

அக்கம் பக்கம்

வெட்டி ஆபீசர்!

அரசியல்வாதிகள், எப்போதுமே அதிகார வர்க்கத்துடன் பழகுவதால், தங்களை எதிர்த்து, யாரும் கேள்வி கேட்கக் கூடாது என, நினைக்கின்றனர். அப்படி கேள்வி கேட்டால், எரிமலையாக வெடித்துச் சிதறுகின்றனர்; சமீபத்தில், டில்லியில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

மத்திய சிறு மற்றும் குறு தொழில்கள் துறை அமைச்சராக பதவி வகிப்பவர், கல்ராஜ் மிஸ்ரா; கட்சியின் மூத்த தலைவர்களில், இவருக்கு முக்கிய இடம் உண்டு.'பா.ஜ.,வில், 70 வயதை கடந்தவர்களுக்கு, ஆட்சியிலும், கட்சியிலும் எந்த முக்கிய பதவியும் தரப்படாது' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளில் இருந்து, தப்பிப் பிழைத்தவர், இவர் மட்டுமே.

வயதான அமைச்சர்களில், நஜ்மா ஹெப்துல்லா போன்ற பெரும் தலைகள் எல்லாம் உருண்ட போதும், தெரிந்தோ, தெரியாமலோ, கல்ராஜ் மிஸ்ரா மட்டும், இன்னும் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்தார் இவர். அப்போது, 'மத்திய அமைச்சர்களிலேயே, உங்களின் செயல்பாடு தான், மிக மோசம் என, செய்தி வெளியாகி உள்ளதே' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

கல்ராஜுக்கு வந்ததே கோபம். 'வேலை செய்யாமல், வெட்டியாக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக என்னை நினைக்கிறீர்களா; அதைப் பற்றி எனக்கு கவலையில்லை; நான், வெட்டி ஆபீசர் தான்' என, ஆவேசமாக கத்தினார்.பத்திரிகையாளர்களோ, 'உண்மையை சொன்னால், இவருக்கு ஏன், இவ்வளவு கோபம் வருகிறது' என, முணுமுணுத்தபடியே கலைந்து சென்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement