Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
நுங்கு சீசன்
பனம் பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். இதனை கல்நுங்கு என்பர். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.
தகவல் சுரங்கம்
குற்றாலம் - பெயர்க்காரணம்
குட்டை வடிவிலான குறுகிய ஆலமரங்களுக்கு 'குறு ஆலம்' என பெயர். இதனை 'இயற்கையான போன்சாய்' எனலாம். குறுகிய வடிவில் மரங்களை உருவாக்கும் தாவரவியல் கலைக்கு போன்சாய் என்று பெயர். போன்சாய் என்ற ஜப்பானிய சொல், புன்சாய் என்ற சீனமொழிச் சொல்லில் இருந்து வந்தது. அதன் அர்த்தம், தொட்டிமரம். அதாவது சிறு தொட்டியில் வளர்க்கப்படும் மரம் என்று பொருள். சாதாரண மரம் அரை அடி உயரத்தில் இருந்து, மூன்று அடி உயரம் வரை இருக்கும் படி, பழக்கப்படுத்தப்படுகிறது. இத்தகைய குறுகிய ஆலமரங்கள் இயற்கையாகவே அதிகம் இருந்ததால் 'குறு ஆலம்' எனப்பெயர் பெற்று 'குற்றாலம்' என மருவியது என்பர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement