Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
இலையை பதப்படுத்தும் தொழில்நுட்பம்
விளைந்தால் விலை இல்லை, விளையாவிட்டால் வியாபாரம் இல்லை என்பது வாழை விவசாயிகளின் நிலை. காற்றுக்கு அதிகம் பாதிக்கப்படும் தாவரமாக வாழை உள்ளது. வாழையிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகளுக்கு சமமானவை. வாழை இலையைப் பக்குவப்படுத்தும் தொழில்நுட்பம் பரவலானால் வாழை இலைகள் வீணாகாது. வாழை விவசாயிகளுக்கு எப்போதும் லாபம் கிடைக்கும். வாழை இலையைப் பதப்படுத்தும் இந்திய தொழில்நுட்பத்தில் வேதிப்பொருட்கள் எதுவும் இல்லை. கொதிநீர், குளிர்நீர் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.
தகவல் சுரங்கம்
யோகா தலைநகரம்
'யோகா தினம்' 2015 ஜூன் 21ல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்தியாவில் யோகாவிற்கு மிகவும் பிரபலமான ரிஷிகேஷ் இந்தியாவின் 'யோகா தலைநகரம்' என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் உள்ளது. ஹரித்வாரும், ரிஷிகேசும் உத்தரகண்டின் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. ரிஷிகேஷ் கங்கை மிகவும் சுத்தமானதாக உள்ளது. கங்கையும், மலைகளும், மரங்களும் ரிஷிகேஷில் யோகாபயிற்சி நடத்துவதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஏற்படுத்தி உள்ளன. சுவாமி சிவானந்தர் தான் ரிஷிகேஷை யோகா தலைநகராக மாற்ற பெரிதும் முயற்சித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement