Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
புனிதநுால் போற்றும் பழம்
நோம்பு துறத்தல் புனித நிகழ்வில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் பெறுகின்றது. திருக்குரானில் பேரீச்சம்பழம் குறித்து சிறப்பாக கூறப்படுகின்றது. உலகில் 2,500 வகை பேரீச்ச மரங்கள் உள்ளன. இதில் 120 வகை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரீச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. இதன் அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், நரம்பு மண்டல ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தகவல் சுரங்கம்
குற்றாலத்தை சிறப்பிக்கும் குறவஞ்சி
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது குறவஞ்சி. குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளை தரும். குறவஞ்சி நுாலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை இடம் பெறுகின்றன. திருக்குற்றாலக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, தமிழரசி குறவஞ்சி, துரோபதைக் குறவஞ்சி போன்றவை குறவஞ்சி நுால்களாகும். குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement