Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம்: மத்தியில், காங்., ஆட்சியில் இருந்த போது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, கூட்டணியில் இடம் பெற்றிருந்த, தி.மு.க., அதை தடுத்திருக்க வேண்டாமா?

டவுட் தனபாலு: கச்சத்தீவு, காவிரி மேலாண்மை வாரியம், மது, ஜல்லிக்கட்டு, 'நீட்' தேர்வு, ஹைட்ரோ கார்பன், அரசின் கடன் சுமை என, எந்த விவகாரத்தை எடுத்தாலும், கடந்த கால, தி.மு.க., அரசை கைகாட்டுறீங்க... இவற்றில் எல்லாம், தி.மு.க., தீர்வை கண்டிருந்தால், நீங்க எப்படி ஆட்சிக்கு வந்திருப்பீங்க என்பதை, எப்போது யோசிக்கப் போறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

தி.மு.க., -- எம்.எல்.ஏ., பொன்முடி:
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு இடைவெளி விட வேண்டும்.



டவுட் தனபாலு: பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடமே எடுக்கப்படுவதில்லை... தொடர்ந்து, ரெண்டு வருஷம், பிளஸ் 2 பாடங்களை படிப்பதால் தான், அவர்கள் அதிக மதிப்பெண் எடுக்குறாங்க... அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்குகின்றனர்... அதனால, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரண்டின் மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள, அரசு முடிவு செஞ்சிருக்கு... இதை, அனைவருமே வரவேற்கும் போது, நீங்க எதிர்ப்பதன் பின்னணி என்னங்கறது தான், பெரும், 'டவுட்'டை கிளப்புது...!




தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கொள்கை. அதற்காக, அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்.


டவுட் தனபாலு: நீங்க இப்படிச் சொல்றீங்க... ஆனா, 'நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப் போவதாக, சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்றாரு... அப்படீன்னா, இந்த அரசால் என்ன சாதிக்க முடியும்கறது, அவருக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement