Advertisement

அக்கம் பக்கம்

பைத்தியம் பிடிச்சுடுமோ?


'ஜி.எஸ்.டி.,யை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்குள், பாதி உயிர் போய் விடும் போலிருக்கிறதே' என, புலம்புகிறார், மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா.நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது.இதிலுள்ள விதிமுறைகள் குறித்தும், வரி விகிதம் நிர்ணயம் குறித்தும், யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால், பல்வேறு மாநிலங்களும், இந்த வரி விதிப்பு முறைக்கு எதிராக, முதலில் கொடி பிடித்தன.
மாநில அரசுகளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலும், விளக்கமும் அளிக்க வேண்டிய பொறுப்பு, ஹஸ்முக் ஆதியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.ஒவ்வொரு முறையும், மாநில அரசுகளின் பிரதி நிதிகளுடன் ஆலோசனை நடத்தும் போதும், நொந்து, நுாடுல்சாகி விடுகிறார் ஆதியா. 'சாதாரண மக்களுக்கு புரியாத விஷயத்தை, என் தலையில் கட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும்படி, எனக்கு உத்தரவிட்டு உள்ளனரே' என,கடுப்படிக்கிறார் ஆதியா.தொடர்ந்து, ஜி.எஸ்.டி.,யை பற்றியே சிந்தித்து வந்ததால், விரக்தி நிலைக்கு தள்ளப்பட்ட அவர், யோகா பயிற்சி செய்வதற்காக, சமீபத்தில் பெங்களூருக்கு ஓட்டம் பிடித்தார்.'ஒரு வாரமாவது, யோகா, தியான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டால், ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட மன பாதிப்பிலிருந்து விடுபட முடியும் போலிருக்கிறது' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் பரிதாபமாக கூறி வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement