Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
உப்பு இல்லாத கருவாடு
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதத்தில் கடலில் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்நாட்களில் மீனவர்கள் ஏற்கனவே பிடித்த மீன்களை கருவாடு ஆக்கும் தொழிலில் ஈடுபடுவர். ஜூன் முதல் அக்., வரை தமிழகத்தில் கருவாடு சீசன். கருவாட்டில் உப்பு அதிகம் இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வு பெருகி வருவதால் நெத்திலி, கணவாய் மீன்களை உப்பு போடாமல் உலர வைத்து கருவாடாக மாற்றுகின்றனர். இலங்கையில் எல்லா உணவுகளிலும் கருவாட்டுப் பொடி சேர்ப்பதால், கருவாட்டுக்கு இலங்கையில் எப்போதுமே நல்ல விலை.
தகவல் சுரங்கம்
அகராதியில் ஆனி
'ஆனி' என்ற சொல்லுக்கு மூன்றாம் மாதம், உத்திராட நாள், எல்லை போன்ற அர்த்தங்கள் அகராதியில் உள்ளன. முப்போகம் விளையும் காலத்தில் ஆனி மாதத்தோடு ஓர் அறுவடை முடியும். குத்தகை நிலங்களை ஆனி மாதத்தில் தான் மீட்பர். இதனால் கிராமப்புறங்களில் 'ஆனிக் காலாவதி' என ஒரு சொல் உள்ளது. ஆனிமாதத்தின் கடைசி நாட்களை 'ஆனிக் கருந்தலை' என்பர். ஆனி மாதத்தில் கடல் அலையற்று அமைதியாக இருக்கும். இதனை 'ஆனித் துாக்கம்' என்றனர். காலமாற்றத்தால் இன்று நிறைய சொற்கள் காணாமல் போய்விட்டன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement