Advertisement

அக்கம் பக்கம்

மோடியை பாராட்டலாமா?

'எதிர்க்கட்சியினரை பாராட்டியதற்காக, கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்கின்றனர்; இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது' என, புலம்புகிறார், மார்க்.கம்யூ., கட்சியின் ராஜ்யசபா, எம்.பி.,யான ரீட்டாபிரதா பானர்ஜி.இவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இடதுசாரி கட்சியினர் என்றால், எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவர் என, கூறப்படுவது உண்டு.ஆனால், ரீட்டாபிரதா பானர்ஜி, இது போன்ற கட்டுப்பாடுகளை பொருட்படுத்துவது இல்லை. விலை உயர்ந்த உடைகள், விலை உயர்ந்த வாட்ச் என, ஆடம்பர வாழ்க்கையை பின்பற்றுவார். 'கம்யூ., கட்சியைச் சேர்ந்த நீங்கள், ஆடம்பர வாழ்க்கையை பின்பற்றுவது தவறு இல்லையா' என, யாராவது கேட்டால், 'எனக்கு நடிக்க தெரியாதுங்க' என, 'பளிச்' பதில் அளிப்பார்.இவரை, மார்க்சிஸ்ட் மேலிடம், அதிரடியாக, மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. 'கட்சியின் கொள்கை, கட்டுப்பாடுகளை மீறி, ஆடம்பரமாக உலா வந்ததால், பானர்ஜி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என, கட்சி மேலிடம் அறிவித்தது.இது குறித்து, பானர்ஜியிடம் கேட்டால், 'பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டி, சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை தெரிவித்தேன்; இதற்காகத் தான், என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர்' என்கிறார்.கட்சியின் அடிமட்ட தொண்டர்களோ, 'ஆடம்பர வாழ்க்கைக்காக, சஸ்பெண்ட் என்றால், மார்க்சிஸ்ட் கட்சியில், ஒரு சிலரைத் தவிர, எல்லாரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement